முடிவில்லாத முடிவளர்ச்சியை பெற நீங்கள் அதிக சிரமம் பட தேவையில்லை இதோ இந்த எளிமையான முறையை பின்பற்றினால் போதும் ஆபரமான முடி வளர்ச்சியை பெறலாம்.

long hair tips
- Advertisement -

கெண்டைக்காலை தாண்டி முடி வளர வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசையாக இருக்கும். அப்படியான முடி வளர்ச்சியை பெற முடிக்கு மேலோட்டமாக நாம் என்னென்ன வழிமுறைகளை கையாண்டாலும் கூட, நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலமாகவும் தான் முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இதை நாம் ஒரு காலமும் மறுக்க முடியாது. அப்படி முடிவில்லாமல் முடி வளர்ந்து கொண்டு இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி வளர்ச்சி அதிகரிக்க செய்ய வேண்டியது
முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய முக்கியமான சத்தான ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் போன்றவை இந்த முருங்கைக் கீரையில் அதிக அளவு உள்ளது. இதை வாரம் இரண்டு முறையாவது நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடும் பொழுதும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதே நெல்லிக்காயை நாம் காய வைத்து அரைத்தும் தலைக்கு பயன்படுத்தலாம். இது மேல் பூச்சாக போடும் போது முடிக்கு நல்ல ஒரு வளர்ச்சி கொடுக்கும்.

- Advertisement -

இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய பூசணி விதை பெரும் அளவு உதவி செய்யும். பூசணி விதைகளை நன்கு காய வைத்து அரைத்து அதை தயிரில் நன்றாக பேஸ்ட் போல குழைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து முடியை அலசி வர முடியின் வளர்ச்சியை தூண்டுவதுடன், முடி உதிர்வையும் இது தடுக்கும். சூரியகாந்தி விதைகளையும் நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதை பட்டரில் வறுத்து நாம் உட்கொள்வதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிப்பதிலும் உடலுக்கும் பலவிதமான நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும்.

அதே போல் ஆலிவ் ஆயிலை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்து சமைக்கும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இத்துடன் வாரம் ஒரு முறையாவது ஆலிவ் எண்ணெய் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும் இதுவும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். அடுத்து கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு இதை விட ஒரு சிறந்த தீர்வு இருக்க முடியாது என்றே சொல்லலாம். இதே தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்ளும் போது ஆபரமான முடி வளர்ச்சியை பெறலாம்.

- Advertisement -

நாம் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணைக்கும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு. நல்ல சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையை தலைக்கு தொடர்ந்து பய படுத்துவதின் மூலமும் நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம். இவையெல்லாம் சரிவர செய்தாலே முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் முகம் தங்கம் போல் மின்ன வேண்டுமா? பௌர்ணமி போல் பிரகாசமாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த ஃபேஸ் பேக்கை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு மாறிவிடுவீர்கள்.

இத்துடன் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதுடன் உடலுக்கு தேவையான தண்ணீ,ர் நிம்மதியான உறக்கம் போன்றவற்றை நாம் தொடர்ந்து கடைபிடிக்கும் போது நம்முடைய முடியின் வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த பதிவில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் இதை கடைப்பிடித்து பலன் அடையலாம்.

- Advertisement -