முக கருமை நீங்கும் ஸ்க்ரப்பர்

winter face scrub
- Advertisement -

ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றார் போல் நம்முடைய சருமத்தை நாம் பராமரித்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். கோடை காலத்தில் உபயோகப்படுத்தும் ஸ்க்ரப்பர், ஃபேஸ் பேக், பேஷியல் போன்றவற்றை பனிக்காலத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல் பனிக்காலத்தில் உபயோகப்படுத்துவதை கோடைகாலத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. பருவ நிலைகளுக்கு ஏற்றார் போல் தான் நம்முடைய சரும பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் குளிர்காலத்தில் செய்யக்கூடிய ஸ்க்ரப்பரை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக குளிர்காலத்தில் நாம் அதிக அளவு தண்ணீரை குடிக்க மாட்டோம். அதனால் முகத்தில் வறட்சி என்பது ஏற்படும். இதைப் போக்குவதற்கும் அதேசமயம் முகத்தில் இருக்கக்கூடிய கருமை மற்றும் கரும்புள்ளிகள், கருந்துட்டுகள் போன்றவை நீங்குவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான ஸ்கிரப்பரை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த ஸ்க்ரபரை நாம் தயார் செய்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நன்றாக நனைத்து அதை வைத்து முகத்தை நன்றாக ஒத்தி எடுக்க வேண்டும். இப்படி ஒத்தி எடுப்பதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்கள் திறக்கும். அதற்குப் பிறகு நாம் முகத்தில் ஸ்கிரப்பரை உபயோகப்படுத்தும் பொழுது அது நல்ல பலனை தரும். இப்பொழுது ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு காபி தூளை சேர்க்க வேண்டும்.

இவை இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். கலந்த பிறகு வாழைப்பழத் தோலை எடுத்து அந்தத் தோளில் இந்த பேஸ்டை எடுத்து முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். பிரஷ் அல்லது விரலை வைத்து தடவி மசாஜ் செய்வதை விட வாழைப்பழ தோலை வைத்து நாம் மசாஜ் செய்வதன் மூலம் வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் முகத்திற்கு வந்து சேரும். பொதுவாக வெறும் வாழைப்பழத் தோலை மட்டுமே வைத்து நம் முகத்தை மசாஜ் செய்து வந்தால் நம்முடைய முகம் பிரகாசமாக தெரியும்.

- Advertisement -

இந்த பொருட்களோடு சேர்த்து வைத்து நாம் செய்யும்பொழுது இன்னும் பல நல்ல பலன்களை பெற முடியும். மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் வெதுவெதுப்பான தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து முகத்தை நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளும் கருந்திட்டுகளும் இறந்த செல்களும் நீக்கப்படுகின்றன.

தேனில் இயற்கையாகவே ஈரத்தன்மையை கொடுக்கும் தன்மை இருப்பதால் முக வறட்சியை நீக்க தேன் உதவுகிறது. மேலும் இதில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால் முகப் பருக்கள் வருவதை தடுக்கிறது. காபித்தூள் ஒரு சிறந்த ஸ்கிரப்பராக உபயோகப்படுவதால் அதை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

- Advertisement -

வாழைப்பழத் தோலை நம்முடைய முகத்தில் நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருத்திட்டுகள் நீங்க உதவுகிறது. இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதன் மூலம் நிரந்தரமான பிரகாசத்தை நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் அரிசி தண்ணீர் செய்யும் மேஜிக்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்க முடியும்.

- Advertisement -