முகத்தில் அரிசி தண்ணீர் செய்யும் மேஜிக்

rice water
- Advertisement -

அன்றைய காலத்தில் 60, 70 வயதை கடந்த நபர்களும் இளமையாக திகழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் முப்பதை கடப்பதற்கு முன்பே முகத்தில் முதுமை தெரிந்து விடுகிறது. இதற்கு காரணமாக பல இருந்தாலும் தங்கள் முகத்தை பார்த்துக் கொள்வதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று அரிசி கழுவும் தண்ணீரை முகத்திற்கு எப்படி உபயோகப்படுத்துவது என்று இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஜப்பான் மற்றும் கொரியன் நாடுகளில் இருக்கக்கூடிய பெண்கள் என்றும் இளமையாகவும் அழகாகவும் திகழ்வார்கள். அதைப்போல் நமக்கும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக அவர்கள் பயன்படுத்துவது அரிசி தண்ணீரை தான். இதற்காக நாம் முதல் நாள் இரவே 4 ஸ்பூன் அளவிற்கு புழுங்கல் அரிசியை ஒருமுறை மட்டும் லேசாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து ஊற்றிவிட்டு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீர் முகத்திற்கும் அதே சமயம் தலைமுடிக்கும் மிகவும் நல்ல அற்புதமான பலன்களை தரக்கூடியதாக திகழ்கிறது. சாதாரண தண்ணீரை நாம் எப்படி பயன்படுத்துவோமோ அதை போல் அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்த வேண்டும். முகத்தை கழுவும் பொழுது தண்ணீர் ஊற்றி கழுவுவோமா அதற்கு பதிலாக அரிசி தண்ணீரை ஊற்றி கழுவனும். தலைக்கு ஷாம்பு போடும்போது ஷாம்புவை தண்ணீரில் கரைத்து போடுவோமா அந்த தண்ணீருக்கு பதிலாக அரிசி கழுவிய தண்ணீரை வைத்து ஷாம்பு போட வேண்டும். இப்படி சிறு சிறு மாற்றங்களை செய்தாலே பல அற்புதமான பலன்களை நம்மால் பெற முடியும்.

முகம் இளமையாக இருப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய வழியை தான் இப்பொழுது பார்க்க போகிறோம். முதலில் அரிசி கழுவிய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொண்டோம் என்றால் அதில் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து முகத்தில் நன்றாக ஸ்பிரே செய்து அதுவாக காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். இதே போல் தலையிலும் நாம் ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு அல்லது சோள மாவு போட வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்பொழுது அது பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு தண்ணீர் தேவைப்பட்டால் பன்னீரை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முகத்திலும் கழுத்திலும் இந்த பேஸ்ட்டை நன்றாக தடவி இந்த பேஸ்ட் காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். இது காய்ந்து முகம் இறுக ஆரம்பிக்கும். அப்பொழுது ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்திருக்கும் அரிசி தண்ணீரை முகத்திலும் கழுத்திலும் நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு ஒரு காட்டன் துணியை வைத்து துளைத்து எடுத்து விடுங்கள். இப்படி வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் செய்தால் போதும் நீங்களும் ஜப்பான் மற்றும் கொரியன் பெண்கள் மாதிரி மிகவும் அழகாக தென்படுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யும் முறை

நாம் வீணாக்கும் இந்த அரிசி தண்ணீர் ஒன்றே போதும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் என்றும் இளமையாக இருக்கலாம்

- Advertisement -