- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுக சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் பெற உதவும் பூ.

முக சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் பெற உதவும் பூ.

- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. அதிலும் குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அந்த சுருக்கங்களை பார்த்தவுடனேயே தங்களுக்கு வயதாகி விட்டது என்ற எண்ணம் மனதில் உண்டாக்கி விடும். அப்படிப்பட்ட சுருக்கத்தை நீக்குவதற்கும் இளமை தோற்றத்தை பெறுவதற்கும் உதவக்கூடிய பூவை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முதுமையில் ஏற்படக்கூடிய முக சுருக்கத்தை நீக்கி இளமையாக இருப்பது போல் தோற்றமளிக்க உதவும் பல வகைகள் இருந்தாலும் மிகவும் எளிதாக நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய ஒரு பொருளை வைத்து எப்படி முக சுருக்கத்தை நீக்கி இளமையாக இருப்பது என்று பார்ப்போம்.

- Advertisement -

அனைத்து விதமான ஃபேர்னஸ் கிரீம்களிலும், ஆன்ட்டி ஏஜிங் கிரீம்களிலும் இந்த பூவை உபயோகப்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு ஆன்ட்டி ஏஜிங் ப்ராப்பர்ட்டி இந்த பூவிற்கு இருக்கிறது. இதன் அருமை தெரியாமல் பலரும் இதை வீணாக்குகிறோம் என்பதுதான் உண்மை.

சரி அந்த பூ என்னவென்று பார்ப்போமா? அதுதான் அண்ணாச்சி பூ. வாசனை மசாலாக்கள் வரிசையில் வரக்கூடிய இந்த அண்ணாச்சி பூவில் தான் இவ்வளவு அற்புதமான இளமையை தக்க வைத்துக் கொள்ளும் சத்துக்கள் இருக்கிறது. இதை வைத்து எப்படி இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இரண்டு டம்ளர் தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். ஐந்து அண்ணாச்சி பூக்களை எடுத்து ஒன்று இரண்டாக தட்டி அந்த தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரை நன்றாக ஆற வைக்க வேண்டும். அதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும். பிறகு நன்றாக கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலையிலும் இரவு படுக்க செல்வதற்கு முன்பும் முகத்தில் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து விட வேண்டும். முகத்தை துடைக்க கூடாது. இந்த தண்ணீர் அப்படியே முகத்தில் இருக்கட்டும். அதுவாக காய வேண்டும். அவ்வளவுதான். இப்படி நாம் ஒரு வாரம் செய்தாலே நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மறைவதை நம்மால் காண முடியும்.

- Advertisement -

சிலருக்கு நெற்றியில் மட்டும் கோடுகள் போல் விழுகும். அந்த கோடுகளும் சரியாகி முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களும் அடைப்பட்டு முகம் மென்மையாகவும் அதே சமயம் இளமையாகவும், சுருக்கங்கள் ஏதும் இன்றி தோற்றமளிக்கும்.

இதையும் படிக்கலாமே: இயற்கையான கண் மை தயாரிக்கும் முறை

இந்த எளிமையான அழகு குறிப்பு நாமும் பயன்படுத்தி என்றும் இளமையுடன் இருப்போம்.

சற்று முன்