முக சுருக்கங்களை முழுமையாக நீக்கி இளமையான முகப்பொலிவோடு இருக்க, நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த நான்கு பொருட்கள் மட்டுமே போதும். இனி முகச்சுருக்கம் குறித்த கவலையே இல்லாமல் இருக்கலாம்.

muga-surukkam1
- Advertisement -

எந்தப் பெண்ணாவது அழகாக இருக்க வேண்டாம் என்று நினைப்பார்களா, கட்டாயமாக இல்லை. அதிலும் இளம் வயதை விட சற்று வயதாகும் போது தான் அவர்களுக்கு இந்த அழகு பற்றிய கவலையே அதிகம் வருகிறது. ஏனென்றால் இளம் வயதில் முகச்சுருக்கங்கள் இருக்காது, நாம் சாதாரணமாக எதையாவது செய்து முகத்தை அழகாக்கி கொள்வோம். ஆனால் சற்று வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். இதை சரி செய்யவே தனியாக பராமரிக்க வேண்டி இருக்கிறது. இதை மாற்றி முகச்சுருக்கம் இல்லாமல் தோற்றமளிக்க முடியும் என்றால் யாராவது வேண்டாம் என்று கூறுவார்களா. இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் முக சுருக்கம் நீங்கி உங்கள் முகம் எவ்வளவு பிரகாசமாக மாறுகிறது என்று உங்களுக்கே தெரியும்.

முதலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வானலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளுங்கள். பிறகு ஒரு பவுலில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை தனியாக வைத்து விடுங்கள் மீண்டும் இன்னொரு பவுலில் ஒரு வாழைப்பழம் (ஒரு கால் அளவு இருந்தால் போதும்) எடுத்து கொண்டு அதையும் ஸ்பூன் வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் அரைத்து வைத்துள்ள சீரக பவுடர் மற்றும் அடித்து வைத்துள்ள முட்டையின் மஞ்சள் கரு, இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு செய்து விடுங்கள். கடைசியாக இரண்டு அல்லது மூன்று சொட்டு அளவிற்கு எலுமிச்ச பழச்சாறு கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இதை உங்கள் முகத்தில் தடவி பத்து நிமிடம் காத்திருந்து பின் சாதாரண தண்ணீரில் முகம் கழுவி விடுங்கள். இந்த முறையை தொடர்ந்து செய்து வாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் முகத்தில் உள்ள முகச்சுருக்கங்கள் எப்படி காணாமல் போகிறது என்று அதன் பிறகு நீங்கள வயதை சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு உங்கள் முகம் சுருக்கங்கள் நீங்கி இளமை தோற்றத்துடன் தெரிவீர்கள்.

- Advertisement -