சொரசொரனு கரடு முரடா இருக்கிற உங்க முகம் 2 வாரத்தில் சாஃப்டாக மாற 2 முறை இப்படி மட்டும் செய்யுங்க போதும்!

skin-kasakasa
- Advertisement -

எப்பொழுதும் முகத்தில் கையை கொண்டு போகும் முன்பு நாம் யோசிக்க வேண்டும். கையில் இருக்கும் கோடிக்கணக்கான கிருமிகள் மூலமாகவே நம்முடைய சருமம் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகும். அது மட்டுமல்லாமல் நாம் உடலை எப்பொழுதும் உஷ்ணமாக இல்லாமல், குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை எண்ணெய் பொருட்களை தவிர்த்து காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நம்முடைய தேகத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ளலாம்.

முகப்பருக்கள், கரும்புள்ளிகள், மேடு பள்ளங்கள் என்று உங்களுடைய சரும அழகு சீர்கெட்டு இருக்கும் பொழுது நீங்கள் இரண்டு வாரத்தில் இதை மட்டும் செஞ்சி பாருங்க, உங்களுடைய முகம் இவற்றிலிருந்து ரொம்பவே எளிதாக மீண்டு உங்கள் சருமமும் தொட்டுப் பார்த்தால் பட்டு போல பளபளன்னு மாறும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்கு குறையாமல் தண்ணீரை பருகுங்கள். அது போல தேவையற்ற எண்ணெய் பதார்த்தங்களை முற்றிலுமாக ஒதுக்கி விடுங்கள். கருவளையம், முகப்பருக்கள் இருப்பவர்கள் இதை வாரம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும். இதற்கு முதலில் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவை நீங்கள் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இது சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கூடிய ஒரு அற்புதமான பொருளாக இருந்து வருகிறது.

இதனுடன் மை போல் அரைத்த கசகசா ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். கசகசாவில் இருக்கும் மூலக்கூறுகள் நம்முடைய முகப்பருக்களை வேருடன் அழித்து அதன் தழும்புகளை கூட எளிதாக மறைய செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது. பின்னர் இதனுடன் தேவையான அளவிற்கு தயிர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலர விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்து போன செல்கள் நீங்கி புதிய செல்கள் புதுப்பிக்கப்படும். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பவுலில் பப்பாளி பழங்களை கூழ் போல பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து பேஸ்ட் போல கரைத்து மீண்டும் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதை கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் நீங்கள் தடவி உலர விடலாம்.

இதையும் படிக்கலாமே:
ஆரோக்கியமான தலைமுடிக்கு வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்கள் இப்படி எல்லாம் கூட உதவி செய்யுமா?

நன்கு உலர்ந்த பின்பு அரை மணி நேரம் கழித்து நீங்கள் சாதாரண தண்ணீரால் கழுவி கொள்ளுங்கள். ரெண்டு வாரத்தில் இப்படி இரண்டு முறை இந்த ரெண்டு விஷயங்களையும் ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளி விட்டு செய்யுங்கள். இப்படி செய்தாலே உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய எல்லா விதமான சரும நோய்களும் நீங்கி முகச் சுருக்கங்கள் இல்லாத இளமையான ஒரு பொலிவான தேகத்தை எளிதாக நாம் அடையலாம். இதற்கு காசு கொடுத்து அதிக செலவு செய்து பியூட்டி பார்லர் செல்லனும்னு அவசியமே இல்லை.

- Advertisement -