உங்கள் சருமத்தை பளிச்சென்று கலராக மாற்ற இந்த பீட்ரூட் ஒன்று மட்டும் போதும்

betroot face
- Advertisement -

பீட்ரூட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தான் அதனை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பீட்ரூட்டை உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடம்பிற்கு தேவையான இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பு போன்ற நன்மைகளை கொடுக்கிறது. அதேபோல் சரும பராமரிப்பிற்க்கும் இந்த பீட்ரூட் மிகவும் அதிகப்படியாக பயன்படுத்தப் படுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் நல்ல நிறத்தையும், இறந்த செல்களை அகற்றவும் பயன்படுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறுகிறது. வாருங்கள் இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி எப்படி சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குறிப்பு: 1
முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் சீவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் ஊற வைத்த அரிசி, இரண்டு சோற்றுக் கற்றாழை ஜெல் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் முழுவதுமாக தடவி விட்டு, ஐந்து நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதனை 15 நிமிடத்திற்கு அப்படியே உலர விட்டு, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர முகம் பளிச் சென்று கலராக மாறி விடும்.

குறிப்பு: 2
முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை காய்கறி சீவலில் வைத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். இப்படி துருவிய பீட்ரூட் துருவலை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதுமாக தடவி விட வேண்டும். இதனை 20 நிமிடத்திற்கு அப்படியே ஊறவைத்து விட்டு, பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, முகம் மிகவும் மென்மையாக மாறிவிடும்.

அதேபோல் பீட்ரூட் சாறு எடுத்து அதனை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவி வந்தால், கருப்பாக இருக்கும் உங்கள் உதடு விரைவில் சிவப்பு நிறமாக மாறி விடும். அதே பால் தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் உடலின் நிறம் படிப்படியாக கலராக மாறி விடும்.

- Advertisement -