ஆலுவேரா ஜெல்லுடன் இந்த ஒரு பொடியை சேர்த்து பேக் போட்டு பாருங்கள். உங்க முகம் பளிங்கு போல மாறி பார்ப்பவரை சொக்க வைக்கும் பேரழகை பெறலாம்.

aloe vera face beauty
- Advertisement -

இப்போதெல்லாம் எந்த ஒரு அழகு குறிப்புக்கான பேக்கை தயார் செய்வதாக இருந்தாலும் அதில் ஆலுவேரா ஜெல்லுக்கு முக்கிய பங்கு உண்டு ஏனென்றால் இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் முகத்தை பள பளப்பாகவும் என்றும் இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. இப்போது இந்த அழகு குறிப்பு பதிவிலும் ஆலோவேரா ஜெல்லை பயன்படுத்தி ஒரு அருமையான ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முகம் வெள்ளையாக ஆலுவேரா ஜெல் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முன்பாக முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும் அதற்கு சுத்தமான காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பஞ்சை நனைத்து உங்கள் முகம் முழுவதும் ஊற்றி எடுத்த பிறகு, சிறிது நேரம் கழித்து முகத்தை துணி வைத்து துடைத்து விடுங்கள். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் வெளியேற்றி விடும். அடுத்து நீங்கள் முக அழகிற்காக போடும் பேக்கும் முகத்திற்குள் செல்ல இது உதவி செய்யும்.

- Advertisement -

அடுத்து முகத்திற்கு சின்னதாக ஒரு ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும் அதற்கு வீட்டில் இருக்கும் இட்லி மாவு கொஞ்சம் எடுத்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்து இரண்டு நிமிடம் வரை லேசான மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு உங்கள் முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். இந்த இரண்டு முறை செய்த பிறகு உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கு இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் பளிச்சென்று மாறி இருக்கும். இப்போது முகத்திற்கான அந்த பேக்கை தயார் செய்து விடலாம்.

இதற்கு ஒரு சின்ன பௌலில் ஒரு ஸ்பூன் சுத்தமான ஆலிவ் வேரா ஜெல் இதற்கு நீங்கள் வீட்டில் தயாரித்து ஆலுவேரா ஜெல்லை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு ஸ்பூன் ஆவாரம் பூ பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்தால் ஒரு பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும். இதை முகத்தில் போட்டு பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து உங்கள் முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போடலாம். ஏன் வாரம் முழுவதுமே கூட செய்தாலும் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுத்தாது. ஏனென்றால் இது அனைத்துமே இயற்கையான பொருட்கள் தான். எதிலும் சிறிதளவு கூட கலப்படம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: முக அழகிற்காக அலோவேரா ஜெல்லை பயன்படுத்துவதாக இருந்தால், இனி இப்படி பயன்படுத்தி பாருங்கள். உங்கள் அழகு முன்பு இருந்ததை விட பல மடங்கு கூடிவிடும் அதிசயம் நடக்கும்.

முகம் வெள்ளையாக கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்டுத்தி சரும பாதிப்பை ஏற்படுத்தி கொள்ளாமல் இது போன்ற இயற்கையான முறைகளை கையாண்டால் இவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை தொடர்ந்து செய்து பாருங்க உங்கள் முகம் பளிங்கு போல பளபளப்பாக ஜொலிக்கும்.

- Advertisement -