முக அழகிற்காக அலோவேரா ஜெல்லை பயன்படுத்துவதாக இருந்தால், இனி இப்படி பயன்படுத்தி பாருங்கள். உங்கள் அழகு முன்பு இருந்ததை விட பல மடங்கு கூடிவிடும் அதிசயம் நடக்கும்.

Aloe Vera beauty
- Advertisement -

முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் போதே அதை இயற்கையான முறையில் எப்படி செய்வது என்று தான் யோசிக்க வேண்டும். இது தான் முகம் எப்போதும் இளமையாக இருக்கவும், அதே நேரத்தில் எந்த பக்க விளைவு இல்லாமல் நம் சருமத்தை காக்கவும் சிறந்த வழி. இப்போதெல்லாம் முக அழகை காக்க பயன்படுத்தும் அனைத்து பேக்குகளிலும் முக்கியமாக சேர்க்கப்படுவது இந்த ஆலுவேரா ஜெல். இதை எப்படி எந்தவித கெமிக்கலும் இல்லாமல் நாம் வீட்டிலே தயாரிப்பது என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் தெரியவில்லை. வீட்டில் கற்றாழை ஜெல்லை தயார் செய்யும் பொழுது அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் கடைகளில் கிடைப்பது போன்ற கெட்டியான ஆலிவேரா ஜெல் எப்படி தயாரிப்பது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கற்றாழை மடலை அடிப்பாகம் வரை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வடியும் இதை முகத்திற்கு பயன்படுத்தவே கூடாது. இதை பயன்படுத்தும் போது முகத்திற்கு தேவையில்லாத பிரச்சனைகளை இவை ஏற்படுத்தும். எனவே நீங்கள் நறுக்கி எடுத்த கற்றாழையை ஒரு தட்டில் ஒரு மணி நேரமாவது நேராக அப்படியே நிற்க வைத்து விடுங்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த திரவம் முழுவதும் இறங்கி தட்டில் படிந்து விடும் அதன் பிறகு கற்றாழையின் அடிப்பகுதியை நறுக்கி எடுத்து விடுங்கள் உங்கள் வீட்டில் செடிகள் வளர்த்து வந்தால் செடிகளுக்கு இதை கொடுத்து வரலாம் செடி வளர இது நல்ல உரமாக பயன்படும்.

அதன் பிறகு கற்றாழையின் மேல் உள்ள தோல் பகுதிகளை நீக்கிவிட்டு அந்த ஜல்லை குறைந்தது எட்டு முறையாவது நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும் இது மிகவும் முக்கியம் இத்தனை முறை சுத்தம் செய்த பிறகு நம் முகத்திற்கு பயன்படுத்தினால் தான் அது நம் முகத்திற்கு ஏற்ற பக்குவத்திற்கு வரும்.

- Advertisement -

இதன் பிறகு இந்த ஜல்லை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இது கடைகளில் கிடைக்கும் கெட்டியான ஜல் பதத்தில் இருக்காது கொஞ்சம் தண்ணீர் பதத்தில் தான் இருக்கும். கடைகளில் அந்தப் பதத்திற்கு வர வைப்பதற்காக அதில் கெமிக்கல்களை கலப்பார்கள். இது இயற்கையான முறையில் நாம் தயாரிக்கிறோம் என்பதால் அப்படி வராது. இதை பாட்டிலில் சேர்த்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

முகத்திற்கு ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்த வேண்டும் என்றால் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனே அதை பயன்படுத்தக் கூடாது. நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என நினைத்தால் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே ஃப்ரிட்ஜில் இருந்து அதை எடுத்து வைத்து அதன் குளிர்ச்சி தன்மை முழுவதுமாக நீங்கிய பிறகு தான் முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

ஒரு வேளை உங்களுக்கு கடைகளில் கிடைப்பது போல கெட்டியான ஆலிவேரா ஜெல் வேண்டும் என்றால் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் எல்லாம் ஜெலட்டின் பவுடரரை வாங்கி கொள்ளுங்கள். இப்போது அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது ஒரு சிறிய கிண்ணத்தில் நீங்கள் வாங்கி இருக்கும் ஜெலட்டின் பவுடரில் ஒரு ஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் டபுள் பாயில் முறையில் வைத்தால் அது கெட்டியான ஜெல் பதத்திற்கு உருகி வரும். அதன் பிறகு அந்த ஜெல்லுடன் நீங்கள் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் ஆலிவேரா ஜெல்லையும் சேர்த்து நன்றாக கலந்தால் கடைகளில் கிடைக்கும் ஆலுவேரா ஜெல் போலவே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மருதாணி இலையை மிக்ஸியில் அரைக்கும் பொழுது இந்த 2 பொருள் சேர்த்து அரைங்க, பித்தம் இருந்தா கூட கை செவப்பா செமையா செவக்கும்!

இப்படியும் கூட நீங்கள் ஆலுவேரா ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளலாம். நமக்கு இயற்கை பல வரங்களை கொடுத்திருக்கிறது. அதை சரியான முறையில் நாம் பயன்படுத்தி எந்த வித பாதிப்பும் இல்லாமலே இயற்கையான முறையில் நாம் அழகுடன் மிளர முடியும்.

- Advertisement -