அடிக்கிற வெயிலில் முடி ரொம்பவும் டிரை ஆகி கொட்டிக் கொண்டே இருக்கிறதா? இந்த 1 ஹேர் பேக் போதும். இந்த வெயில் காலத்திலேயே உங்களுடைய முடியை அழகாக அடர்த்தியாக வளர்த்து விடலாம்.

hair12
- Advertisement -

அடிக்கிற வெயிலில் வெளியே சென்று வந்தால் போதும். தலையில் வியர்வையும், தூசியும் அப்படி சேர்ந்துவிடும். இந்த பொல்யூஷனால் ரொம்பவும் முடி உதிர்வு இருக்கும். வெயில் காலத்தில் உண்டாகக் கூடிய இந்த பிரச்சனைகளின் மூலம் தலைமுடி அதிகமாக உதிர தொடங்கும். வெயிலில் காலத்தில் முடி உதிராமல் இருக்க, தலைமுடி டிரை ஆகாமல் இருக்க ஒரு சூப்பரான எளிமையான ஹேர் பேக்கை எப்படி வீட்டில் இருந்தபடியே தயார் செய்வது என்பதை பற்றித்தான் இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வெயில் காலத்தில் இந்த ஹேர் பேக்கை தலையில் போடுவதன் மூலம் சளி பிடிக்கும் என்ற பிரச்சனையும் இருக்காது. அது மட்டுமில்லாமல் இந்த ஹேர் பேக்கை சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை யார் வேண்டுமென்றாலும் தலையில் போடலாம்.

- Advertisement -

முடி உதிர்வை தடுக்கும் வெயில் கால ஹேர் பேக்:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 கொத்து கருவாப்பிள்ளை, செம்பருத்திப்பூ 10, செம்பருத்தி இலை 20. இந்த 3 பொருட்களையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். செம்பருத்திப்பூ, இலை இது இரண்டும் சேர்ந்து அறைபடும்போது இந்த பேக் கொழ கொழப்பாக நமக்கு கிடைக்கும்.

இதை ஒரு வெள்ளை காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி எடுத்தால் அடர் பச்சை நிறத்தில் ஒரு ஹேர் பேக் கிடைக்கும். இந்த பேருடன் முட்டை 1 ஊற்றி, அடித்து கலக்கி கொள்ளவும். இறுதியாக 1 ஸ்பூன் விளக்கெண்ணெயையும் ஊற்றி நன்றாக கலந்து, உங்களுடைய தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டியது தான். நீங்கள் முட்டை பயன்படுத்த மாட்டீர்கள் என்றால் திக்கான தேங்காய் பால் 1/4 கப் எடுத்து இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். (இந்த ஹேர் பேக் லிக்விட் பதத்தில் தான் இருக்கும். தலையில் அப்ளை செய்வது சுலபம்).

- Advertisement -

விளக்கெண்ணெய், தேங்காய் பால், முட்டை இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் தலையில் ஹேர் பேக்குடன் சேர்க்கும்போது, தலைமுடி டிரை ஆகாமல், தலைமுடிக்கு தேவையான புரோட்டின் சத்து அதிகமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது நாம் கையில் ஹேர் பேக் தயாராக இருக்கிறது. இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் இருக்கும் சிக்கை எல்லாம் சுத்தமாக எடுத்து விடுங்கள்.

பிறகு இந்த ஹேர் பேக்கை வேர்க்கால்களில் படும்படி போடுங்கள். பிறகு முடி நுனி வரை போட்டுவிட்டு, ஒரு கொண்டைக்கட்டி தலையில் ஒரு கவர் போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடங்கள் வரை இந்த ஹேர் பேக் உங்களுடைய தலையிலேயே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: அத்திப்பழம் உடலுக்கு மட்டும் அல்ல தலைமுடிக்கும் பலம் கொடுக்கிறது தெரியுமா? பலம் இல்லாத உங்கள் கூந்தலை பலம் பெற செய்ய அத்திப்பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

அதன் பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்தாலே உங்கள் தலைமுடியில் வரக்கூடிய வித்தியாசம் நன்றாக தெரியும். வெயில் காலம் முடியும் வரை வாரத்தில் இரண்டு நாள் இந்த ஹேர் பேக்கை தாராளமாக உங்களுடைய தலையில் போட்டு வரலாம். வெயில் காலம் முடிவதற்குள் உங்களுடைய முடி வளர்ச்சியை நீங்களே கவனித்து பாருங்கள். எந்த அளவுக்கு வளர்கிறது என்பதை. ரெமிடி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -