நீங்கள் எவ்வளவு கறுப்பாக இருந்தாலும் ஓரளவுக்கு நல்ல நிறமாக வெள்ளையாக மாற வீட்டில் இருக்கும் காபித்தூள் 1 ஸ்பூன் போதுமே!

white-skin-coffee-powder
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறத்துடன் பிறக்கிறோம். ஒருவர் இயற்கையாகவே வெள்ளை வெளேரென பளிச்சிட இருப்பார்கள். ஆனால் சிலரோ இதற்கு நேர் மாறாக நல்ல கருப்பு நிறத்துடன் கலையாகவும் இருப்பது உண்டு. பிறக்கும் பொழுது இருக்கும் நிறமானது நாளடைவில் வளர வளர நம் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் அடைந்து கொண்டே வரும். வெயிலில் அதிகம் சுற்றி திரிபவர்களுக்கு தன் உண்மையான நிறத்தை இழக்க நேரிடுகிறது.

நாளாக நாளாக அதுவே அவர்களுடைய உண்மையான நிறம் போல மாறிவிடுகிறது. கறுத்த தேகம் உடையவர்கள் தங்களுடைய ஒரிஜினல் நிறத்தை அடைய ரொம்பவும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை! வீட்டில் இருக்கும் காபித்தூள் மற்றும் இந்த ஒரு பொருள் போதும், ஒரே மாதத்தில் இயற்கையான நல்ல பளிச்சென வெண்மையான நிறத்தை நீங்களும் அடையலாம். அந்த பொருள் என்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

காபி தூளில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் நம் முகத்தில் இருக்கும் மெலனின் பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பவுடர் மெலனின் அளவை அதிகரிக்க செய்கிறது. மெலனின் என்பது சருமத்தில் இருக்கும் நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பண்பு ஆகும். இதன் அளவு குறையும் பொழுது இயற்கையாக நாம் சோர்வடைந்தது போல மந்தமான நிறத்துடன் காணப்படுகிறோம்.

வெயிலில் அதிகம் சுற்றி திரிபவர்களுக்கு சூரியனின் ஒளி கதிர்கள் இந்த மெலனின் அளவை குறைத்து விடுகிறது. இதனால் கழுத்து, முகம், கை மற்றும் கால் பகுதி மட்டும் கறுத்து போயும், மற்ற இடங்களில் சாதாரண நிறத்தையும் கொண்டிருப்போம். இது போன்ற மெலனின் அளவு குறைந்து கறுத்த சருமம் உடையவர்களுக்கு மீண்டும் தன் நிறத்தை அடைவதற்கு வீட்டில் இருக்கும் இந்த காபி தூள் போதும்.

- Advertisement -

ஒரு ஸ்பூன் காபி பவுடருடன், ஒரு ஸ்பூன் பச்சை தேயிலை எனப்படும் கிரீன் டீ சேர்க்க வேண்டும். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் முகத்தில் இருக்கும் கறுமையை அகற்றி வெள்ளை வெளேரென நம்மை மாற்றி காண்பிக்கிறது. கிரீன் டீயில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நம் சரும துளைகளுக்குள் சென்று இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ பேக் ஒன்றை கிழித்து அதனுள் இருக்கும் தேயிலை தூளை பிரஷ்ஷாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே பயன்படுத்திய தேயிலைத் தூளை உபயோகிக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு பவுடர்களையும் நன்கு மிக்ஸியில் போட்டு பவுடராக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முதலில் முகத்திற்கு சர்க்கரை அல்லது அரிசி மாவு பயன்படுத்தி ஸ்கிரப் செய்து கொள்ளுங்கள். நன்கு பரப்பரவென அழுத்தம் கொடுக்காமல் தேய்த்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். அதன் பிறகு இந்த பவுடருடன் சிறிதளவு தண்ணீர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் பேக் போல போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் முகம் வெள்ளை வெளேர் என பளிச்சிடும். இதே போல வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் விரைவிலேயே உங்களுடைய கறுத்த தேகம் வெள்ளை வெள்ளேரென மாறும்.

- Advertisement -