வெறும் பத்து ரூபாய்க்கு ரோஜாவை வாங்கி இப்படி மட்டும் செய்து பாருங்க, உங்க முகத்துக்கும், ரோஜா இதழுக்கும் வித்தியாசமே தெரியாது. அந்த அளவுக்கு கலரா மாறிடுவீங்க.

- Advertisement -

நல்ல பளபளப்புடன் கூடிய மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லோரும் நினைக்கக் கூடியது தான் அப்படியான சருமத்திற்கு இனி நீங்கள் அழகு நிலையம் செல்லவோ, அல்லது அதிக விலை கொடுத்து கிரீம் போன்றவற்றை வாங்கவோ தேவையில்லை. இயற்கையான முறையில் அதிக செலவில்லாமல் முகத்தை அழகாக இயற்கை நமக்கு அளித்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமான ரோஜா இதழ்கள் இருக்கிறது. இதை வைத்து முகத்தை உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். இந்த பதிவில் ரோஜா இதழ் வைத்து செய்யும் அழகு குறிப்பு பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இதை செய்ய பத்து ரூபாய்க்கு பன்னீர் ரோஜா பூக்களை வாங்கி அதன் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து அலசி நிழலில் உலர்த்தி தண்ணீர் சேர்க்காமல் அப்படியே அரைக்க வேண்டும். இந்த குறிப்பு களை பயன்படுத்தும் முன்பாக முகத்தை ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்த பிறகு இந்த பேக்குகளை போட தொடங்குங்கள்.

- Advertisement -

குறிப்பு: 1
பௌலில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா விழுது, இத்துடன் காய்ச்சாத பச்சை பால் ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தேய்த்த பிறகு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை தண்ணீரால் அலம்பி விடுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கி முகத்தை மிருதுவாக மாற்றுவது மட்டும் இல்லாமல் முகப்பருவினால் தோன்றிய சிறு சிறு துளைகளை எல்லாம் கூட இந்த பேக் சரி செய்து விடும்.

குறிப்பு: 2
ஒரு ஸ்பூன் ரோஜா விழுதுடன், ஒரு ஸ்பூன் தயிர் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முகத்தை அலம்பி விடுங்கள். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி முகப்பருக்களை நீக்கி முகத்தை பளிச்சென்று வைத்திருக்க இந்த பேக் உதவும். அது மட்டும் இன்றி இது உங்கள் முகத்தில் சுருக்கங்கள் வராமலும், முதுமை தோற்றத்தை தடுக்கவும் இந்த பேக் உதவி செய்யும்.

- Advertisement -

குறிப்பு: 3
ரோஜா இதழ் பேஸ்ட் ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக வடிகட்டி சாறை மட்டும் எடுத்து இத்துடன் அரை ஸ்பூன் தேனையும் கலந்து நன்றாக குழைத்து உதடுகளில் தேய்த்து 5 நிமிடம் மசாஜ் செய்து கொடுங்கள். இதனால் உதடு மிருதுவாக மாறுவதுடன் உதடும் நல்ல சிவப்பாக மாறி விடும்.

குறிப்பு: 4
ரோஜா இதழ் பேஸ்ட் ஒரு ஸ்பூன், ஆலுவேரா ஜெல் ஒரு ஸ்பூன் இரண்டையும் ஒன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள சன் டர்ன் ஆன இடங்கள் எல்லாம் இது சரி செய்து விடும். அது மட்டும் இல்லாமல் முகம் வறட்சியுடன் இல்லாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதோடு வெய்யிலினால் தோன்றும் முக வறட்சியும் இது சரி செய்யும்.

- Advertisement -

alovera-gel

குறிப்பு: 5
ரோஜா இதழ் பேஸ்ட் ஒரு ஸ்பூன், அத்துடன் விட்டமின் இ கேப்சில் ஒன்று , இரண்டையும் கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து சுத்தம் செய்து விடுங்கள். இது முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பரு வடுக்கள் போன்றவற்றை நீக்கி முக சுருக்கங்களையும் போக்கும்.

இதையும் படிக்கலாமே: இதுவரைக்கும் இந்த ஷாம்பு யூஸ் பண்ணாதவங்க உடனே ட்ரை பண்ணி பாருங்க, உங்க முடி மட்டும் இல்ல நீங்களும் சைன் ஆகிடுவீங்க. மிஸ் பண்ணாதீங்க அப்புறம் கண்டிப்பா வருத்தபடுவீங்க.

ரோஜா இதழ் வைத்து இத்தனை பேக்குகள் தயார் செய்து சருமத்தின் அழகு பாதிக்காமல் காத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்களும் இனி அழகிற்காக அதிக செலவு செய்யாமல் இது போல எளிமையான முறையில் இயற்கையாகவே உங்கள் முகத்தை பொலிவாக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -