காண்போரை எல்லாம் பிரம்மிக்க வைக்கும் பேரழகை பெற, ஒரு ஸ்பூன் தேன் இருந்தால் போதும். உங்கள் முகம் தங்கம் போல தகதகவென்று ஜொலிக்க தொடங்கி விடும்.

Honey and Face
- Advertisement -

தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த தேனில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சருமத்தை பாதுகாக்கும். அதுமட்டுமின்றி சருமம் வறட்சியாகாமலும் இளமையை தக்க வைத்துக் கொள்ளவும் தேன் அதிக அளவில் உதவி புரியும். இந்த தேனை வைத்து சில அழகு குறிப்புகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

முகத்தை வெள்ளையாக மாற்ற தேன்:
இதற்கு ஒரு பவுலில் அரை எலுமிச்சை பழ சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் அலம்பி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் சருமம் மெருதுவாக்கிறது.  முகத்தை விரைவில் வெண்மையாக மாற்றவும் இந்த முறை உதவி புரியும்.

- Advertisement -

முகப்பரு சரியாக தேன்:
ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையை பவுடர் ஆகி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து நன்றாக குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த பேஸ்ட்டை வைத்து பத்து நிமிடம் கழித்து முகத்தை துடைத்து விடுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வரும் போது முகப்பருகள் முற்றிலுமாக நீக்குவதுடன், முகப்பரு இருந்த தடம் கூட தெரியாது.

முகம் மிருதுவாகவும் பட்டுப் போல மாறவும் தேன்:
இந்த முறைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து மசாஜ் செய்து முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். இந்த முறையில் உங்கள் சரும மிருதுவாகி பட்டு போல மாறுவதுடன் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி விடும். இதனால் முகத்தில் நல்ல ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் சிவப்பாக மாறும்.

- Advertisement -

உதடு மிருதுவாக்க தேன்:
ஒரு சிலருக்கு உதடு எப்பொழுதும் வறட்சித் தன்மையுடன் காணப்படுவதோடு, அதில் சில சமயம் வெடிப்பு கூட தோன்றும். இது போன்ற பிரச்சனை சரியாக தினமும் சிறிதளவு தேனை உதட்டில் தடவி வந்தால் போதும். உதடு எப்போதும் எண்ணெய் பசையுடன், மிருதுவாக இருப்பதுடன் நல்ல சிவப்பு நிறத்துடன் இருக்கும்.

இவற்றையெல்லாம் செய்வதுடன் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மிதமான சூடு தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்து வருவதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு, சருமமும் நல்ல பளபளப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரட்டில் தடவ தான் வெண்ணை என்று நினைத்திருப்போம்? ஆனால் முகம் கண்ணாடி போல பளபளக்க வெண்ணெய் வைத்து 10 குறிப்புகள் இதோ!

இந்தத் தேனை வைத்து நம் சருமத்தை எந்த அளவிற்கு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்களும் எந்த பக்க விளைவும் இல்லாத இது போன்ற அழகு குறிப்புகளை பயன்படுத்தி மாசற்ற மேனி அழகை பெறுங்கள்.

- Advertisement -