சுருக்கம் நீங்கி இளமையான முகத்தோற்றம் பெற ஃபேஸ் பேக்.

muga surukkam
- Advertisement -

ஒருவருடைய முகத்தை பார்த்தவுடன் அவர்கள் நம்மை விட இளையவர்களா? அல்லது மூத்தவர்களா? என்பதை நம்மால் ஓரளவுக்கு யூகித்துக் கொள்ள முடியும். நாம் யூகித்தது உண்மையாக இருந்தால் அதனால் எந்தவித மன கஷ்டமும் ஏற்படாது. ஆனால் நம்மை விட இளமையாக இருப்பவர்களை நாம் முதுமையாக இருப்பவர்கள் என்று நினைத்து அக்கா அண்ணா என்று அழைக்கும் பொழுது அவர்கள் மன வருத்தப்படுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களே. அப்படிப்பட்ட முதுமை தோற்றத்தை தரக்கூடிய முகச்சுருக்கத்தை நீக்குவதற்கு எந்த ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

முக சுருக்கம் என்பது வயதாகிறது என்பதற்கு உரிய அறிகுறி என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அது மட்டுமே காரணம் கிடையாது. சூரிய ஒளி கதிர்களில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு விரைவிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டுவிடும் மேலும் முக பாவனை அதிகமாக செய்பவர்களுக்கும் முகச்சுருக்கம் என்பது விரைவிலேயே ஏற்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படிப்பட்ட முகச்சுருக்கத்தை விரைவில் வராமல் தடுப்பதற்கு செய்யக்கூடிய முறைகள் என்று பார்க்கும் பொழுது அதிக அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மேலும் ஆன்ட்டி ஆக்சைடு நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் நம் தோலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து முகச்சுருக்கம் ஏற்படுவது தள்ளி வைக்கப்படும்.

சரி முகச்சுருக்கம் வந்துவிட்டது. இப்பொழுது இதை எப்படி நீக்குவது என்று பார்க்கும் பொழுது இதற்கு மருத்துவ ரீதியாக பல ட்ரீட்மென்ட் இருக்கின்றன என்றாலும் அவை அனைத்துமே ஏதாவது ஒரு பக்க விளைவை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அதற்கு மாறாக இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நாம் ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் முகச்சுருக்கத்தை நம்மால் நீக்க முடியும் அதே சமயம் முகச்சுருக்கம் திரும்ப வராமல் தள்ளி வைக்கவும் முடியும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு முதலில் ஒரு உருளைக்கிழங்கு வேண்டும். உருளைக்கிழங்கை நன்றாக உரசி அதில் இருக்கும் சாறை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் புளிக்காத ஒரு ஸ்பூன் அளவு தயிரை சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து விட்டு இதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவையும் சேர்க்க வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு கிளிசரின் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இது கெட்டியாக பேஸ்ட் போல் இருக்காது. நீர்த்துப் போய் தான் இருக்கும். அதனால் இதை கனமான பேஸ்ட்டாக முகத்தில் அப்ளை செய்ய முடியாது. முகத்தை நன்றாக கழுவிய பிறகு இதை தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: முகத்தை பொலிவுடன் மாற்றக்கூடிய முட்டை ஓடு ஃபேஸ் பேக்

இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே நம்முடைய முக சுருக்கத்தை நீக்குவதோடு மட்டுமல்லாமல் முகத்தை பிரகாசமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது.

- Advertisement -