முகத்தை பொலிவுடன் மாற்றக்கூடிய முட்டை ஓடு ஃபேஸ் பேக்

egg shell powder
- Advertisement -

ஒருவர் முகத்தில் இருக்கும் புத்துணர்ச்சியானது அவர்களை மட்டும் புத்துணர்ச்சியுடன் வைப்பதற்கு உதவுவது கிடையாது. அவர்களைப் பார்த்து பேசும் நபர்களுக்கும் அந்த புத்துணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட புத்துணர்ச்சியை பெறுவதற்கும் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களையும், தளர்ச்சியையும் நீக்குவதற்கு எந்த ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நாம் நிறமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் முகத்தில் ஒருவித பொலிவு இருக்க வேண்டும். அந்த பொலிவை பெறுவதற்கு நாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் முட்டை ஓடு உதவுகிறது. இந்த முட்டை ஓடை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயார் செய்வது என்று பார்ப்போம் பாருங்கள்.

- Advertisement -

பொதுவாக முட்டையில் பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன என்றும், அதை நாம் தினமும் உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல் முட்டையை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே ஆனால் நாம் வேகவைத்து உரித்த முட்டை ஓட்டையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம். அதில் கால்சியமும் புரோட்டீனும் அதிக அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. முட்டை வேகவைத்த பிறகு முட்டை ஓட்டை தனியாக எடுத்து அதை ஒருமுறை சுத்தமாக கழுவி விட்டு மறுபடியும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதித்த இந்த முட்டை ஓட்டை தனியாக எடுத்து நன்றாக உலர வைக்க வேண்டும். அவை நன்றாக காய்ந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு முட்டை ஓடு பொடியை சேர்க்க வேண்டும். பிறகு அதில் அரை எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து விட்டு மேலும் போதுமான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக பேஸ்ட் பலத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி காய விட வேண்டும். இவை நன்றாக காய்ந்த பிறகு சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து விட்டு ஸ்கிரப் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்குகிறது. அது மட்டுமல்லாமல் தளர்ச்சியை அடைந்த முகம் புத்துணர்ச்சியுடன் திகழும். ஒருவித பொலிவும் இயற்கையிலேயே ஒரு விதப்பிரகாசமும் முகத்தில் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஓபன் போஸ் என்று சொல்லக்கூடிய முக துவாரமும் மூட ஆரம்பிக்கும். மேலும் முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை தடுப்பதற்கும் இந்த ஃபேஸ் பேக் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: முகம் பளிங்குகள் போல ஜொலிக்க அழகு குறிப்பு.

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகப்படுத்துவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -