உங்கள் முகம் தேவதையை போல பிரகாசிக்க, தக்காளியை இந்த பொருளுடன் சேர்த்து பேக் போடுங்கள். இதை போட்டு தான் உங்கள் முகம் பளிச்சியென்று ஆச்சின்னு சொன்ன யாரும் நம்பவே மாட்டாங்க

- Advertisement -

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களை பராமரித்து கொள்ளவும் தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளவும் நேரம் என்பதே மிகவும் குறைவு தான், அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களின் ஆரோக்கியம், அழகு இரண்டிலும் போதுமான அளவில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களை கொஞ்சம் நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும் என்று கொஞ்சமாவது பார்த்துக் கொள்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அப்படி ஒரு எண்ணம் கூட தோன்றுவதே இல்லை, அதற்கான நேரமும் இருப்பதில்லைஅதற்காக பணம் செலவழிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. இனி இதை எதையுமே அவர்கள் செய்யத் தேவையில்லை அவர்கள் வேலை செய்யும் நேரத்திலே கொஞ்சம் கூட காசு செலவு செய்யாமல் அவர்களை அழகாக பராமரித்துக் கொள்ள இதோ ஒரு அருமையான குறிப்பு.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நாளில் பாதி நேரத்திற்கு மேல் சமையல் அறையிலே செலவழித்து விடுகிறார்கள் அப்படி அதிக நேரத்தை செலவழிக்கும் அந்த இடத்திலே அங்கிருக்கும் பொருட்களை வைத்து இந்த குறிப்பை பயன்படுத்தி அழகுப்படுத்தி கொள்ளலாம் அதை எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இதற்கு தேவையான பொருள் அரை தக்காளி, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் அரிசி மாவு இது மட்டும் இருந்தால் போதும் நீங்கள் பிரகாசிக்க. நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் போது ஒரு பாதி தக்காளி மட்டும்எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியின் உள்ளே விதை இருக்கும் பகுதியை முழுவதுமாக எடுத்து விடாமல் கொஞ்சம் திறந்து மூடுவதை போல செய்து கொள்ளுங்கள், கொஞ்சம் கத்தியை வைத்து எடுத்தால் போதும் ஒரு மூடி போல் திறந்து கொள்ளும், அதன் பிறகு அந்த இடத்தில் சர்க்கரையும், அரிசி மாவையும் சேர்த்து குழைத்துஅதில் வைத்து மேலே மறுபடியும் இந்த தக்காளி விதை பகுதியைபோட்டு மூடி வைத்து விடுங்கள். தக்காளி சாறுடன் அரிசி மாவு, சக்கரை எல்லாம் கரைந்துநன்றாக ஒரு கிரீம் பதத்திற்கு வந்து விடும்.

இதை அப்படியே உங்கள் முகம், கைகளில் ஒரு பத்து நிமிடம் கிளாக் வைஸ், ஆன்ட்டி கிளாக் வைஸ் இப்படி இரண்டு புறமும் மசாஜ் செய்த பிறகு பத்து அப்படி விட்டு முகத்தை அலம்பி விடுங்கள்.

- Advertisement -

இப்படி முகத்தில் தோன்றும் முகச்சுருக்கம், கரும்புள்ளிகள் வெயிலினால் ஏற்படும் கருந்திட்டுகள் அனைத்தும் நீங்கி முகப்பொலிவு பெற்று உங்கள் முகம் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

இதை தக்காளி சாறு எடுத்து இவையெல்லாம் சேர்த்து குழைத்து இரவு படுக்கும் போது தேய்த்த பிறகு முகத்தை அலம்பி விட்டு இரவு தூங்கி எழுந்தால், காலையில் முகம் இன்னும் பிரகாசமாக இருக்கும். ஆனால் இதை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக சிரமப்பட்டு செய்யாமல் விட்டு விடுவார்கள். இதைப் போல உங்கள் சமையல் வேலையுடன், இப்படி சுலபமாக உங்களை நீங்கள் அழகு படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -