இந்த ரெண்டு பொருளை எப்படி யூஸ் பண்ணனும் மட்டும் தெரிஞ்சா போதும், எந்த ஃபங்ஷன் போக்கணும்னாலும் டக்குனு ரெடி ஆகிடலாம். அப்புறம் ஃபங்ஷன்ல இருக்கவங்க எல்லா பார்வையும் உங்க மேல தான் இருக்கும் அப்படி ஜொலிப்பீங்க.

- Advertisement -

முகத்தை எப்போதும் அழகாக வைத்திருப்பது நல்ல விஷயம் தான். இது அழகு சம்பந்தப்பட்ட விஷயமாக மற்றும் பார்க்காமல், இப்படி இருப்பதால் நமக்குள்ளே ஒரு நல்ல புத்துணர்ச்சியும் இருக்கும். யாராவது நம்மை பார்த்து என்ன உங்க முகம் டல்லா இருக்கே என்று கேட்டால் போதும், டல்லாக இல்லை என்றாலும் கேட்டவுடன் நம்முடைய முகம் மாறி விடும். அதே நாம் எப்போதும் இப்படி முகத்தை பளிச்சென்று என்று வைத்து பிரஷ்ஷாக இருந்தால் பார்ப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் நமக்கும் அது புத்துணர்ச்சியாக இருக்கும் . முகத்தை எப்போதும் பளிச்சென்று வைத்திருப்பது நல்ல விஷயம் தான். அதற்காக நீங்கள் அதிக செலவு செய்து கிரீம் எல்லாம் வாங்கி போட்டுக் கொண்டிருக்க வேண்டாம் இந்த குறிப்பில் இருக்கும் எளிய முறையை பயன்படுத்தினாலே போதும் முகம் பளிச்சென்று ஆகிவிடும். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. வாங்க இந்த பேக் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பேக் போடுவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு சுத்தமான காய்ச்சாத பசும்பால் எடுத்து அதை ஒரு காட்டனில் நனைத்து உங்கள் முகத்தில் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் கழித்து துடைத்து விட்டால் போதும். இப்படி செய்வதால் உங்கள் முகத்தில் உள்ள துளைகள் எல்லாம் திறந்து அதில் இருக்கும் அழுக்கு வெளிவருவதுடன் அடுத்து போடும் பேக் உள்ளே சென்று முகத்தை அழகு படுத்த உதவியாக இருக்கும்.

- Advertisement -

பசும் பால் கிடைக்காதவர்கள் ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம். இப்போது பேக்கை தயார் செய்து விடுவோம். ஒரு பவுலில் மூன்று டேபிள் ஸ்பூன் புளிக்காத தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். ஆயில் ஸ்கின் உள்ளவர்களாக இருந்தால் மட்டும் கஸ்தூரி மெட்டி ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் அதுவும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இவையெல்லாம் சேர்த்த இந்த பேக்கை நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து விடுங்கள். இது முகத்தில் நன்றாக காய வேண்டும். காய்ந்த பிறகு உங்கள் விரல்களை தண்ணீரில் நனைத்து கொண்டு முகத்தை சர்க்கிள் வயசில் (அதாவது வட்டமாக) மசாஜ் செய்யுங்கள். இதில் இந்த மசாஜ் செய்யும் முறை தான் மிகவும் முக்கியம். இப்படி செய்யும் போது ஏற்கனவே நாம் பால் வைத்து துடைத்ததால் நம் முகத்தில் உள்ள துளைகள் திறந்திருக்கும். இப்படி செய்வதன் மூலம் இந்த பேக்கில் உள்ள பொருட்கள் முகத்திற்குள் சென்று முகத்தை அழகுப்படுத்த மிக உதவியாக இருக்கும் எனவே மசாஜ் கட்டாயமாக செய்ய வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடம் இந்த மசாஜ் செய்த பிறகு உங்கள் முகத்தை தண்ணீர் வைத்து துடைத்து விடுங்கள் போதும்.இதை நீங்கள் பங்க்ஷன் செல்வதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்து செய்தால் போதும் முகம் நல்ல பளப் பளப்பாக மாறி விடும். ஆனால் கட்டாயமாக இதை இரவு தூங்கும் முன் தான் செய்ய வேண்டும் பகலில் செய்ய வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: சருமத்தை உள்ளிருந்தே பளபளன்னு செய்யக்கூடிய டாப் 5 கிச்சன் பொருட்கள் என்னென்ன? உங்க கிச்சனில் இந்த பொருள் இருந்தால் நீங்களும் ஹீரோயின் ஆகலாமே!

இந்த எளிமையான அழகு குறிப்பு எல்லோரும் பயன் படுத்த கூடியது தான். நீங்களும் இந்த குறிப்பை பயன்படுத்தி உடனடியான முகப்பொலிவை பெறுங்கள்.

- Advertisement -