சருமத்தை உள்ளிருந்தே பளபளன்னு செய்யக்கூடிய டாப் 5 கிச்சன் பொருட்கள் என்னென்ன? உங்க கிச்சனில் இந்த பொருள் இருந்தால் நீங்களும் ஹீரோயின் ஆகலாமே!

kitchen-beauty-skin
- Advertisement -

சருமத்தை மேலோட்டமாக சுத்தம் செய்வதை விட சரும துவாரங்களுக்குள் சென்று சுத்தம் செய்யக்கூடியதாக நீங்கள் உங்களுடைய முகத்தை பராமரித்து வருவது அவசியம் ஆகும். எதையும் வேருடன் அழித்தால் தான் அது மீண்டும் வளராமல் இருக்கும். அது போல நம்முடைய சரும பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்குவதற்கு உள்ளிருந்தே பலன் தரக்கூடிய அற்புதமான பொருட்கள் நம் வீட்டு சமையல் அறையிலேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு டாப் 5 பொருட்கள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்துவதால் நாம் அழகாக ஹீரோயின் போல ஆகலாம்? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1. கற்றாழை:
சருமத்திற்கு கற்றாழையை விட சிறந்த ஒரு பேக் இருக்கவே முடியாது என்று கூறலாம். முகத்தில் இருக்கும் செல்களை சமன் செய்யக்கூடிய அற்புதமான ஒரு பொருள் கொலாஜன். அந்த கொலாஜன் கற்றாழையில் நிறைந்து காணப்படுகிறது. இது சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் சீர் செய்யும் மேலும் முகத்தில் இருக்கும் எரிச்சலை உடனடியாக தடுத்து மென்மை தன்மையுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.

- Advertisement -

2. பால்:
இயற்கையான கிளன்சிங் பொருளாக செயல்படுவது பால்! நம் வீட்டில் பால் கண்டிப்பாக இருக்கும். இந்த பாலை தினமும் இரவு தூங்கும் முன்பு பஞ்சால் நனைத்து முகம் முழுவதும் தொட்டுக் கொள்ளுங்கள், அப்படியே தூங்கி விடுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை அலம்பிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். இது கறைகள் இல்லாமல் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

3. தேன்:
சுத்தமான தேன் எல்லோருடைய வீட்டிலும் வைத்திருப்பது வீட்டில் ஒரு சிறந்த மருத்துவராக செயல்படும். தேன் உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல் நம்முடைய தேகத்தையும் மினுமினுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது ஒரு சிறந்த மாய்ஸ்ரைசராக செயல்படும். உங்களுடைய சருமத்தில் அலர்ஜி பண்புகள் ஏற்பட்டால் சுத்தமான தேனை தடவினாலே உடனடியாக அது சரி ஆகிவிடும். தேனுடன் பப்பாளி பழக்கூழ், வாழைப்பழ கூழ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை சேர்த்து முகத்திற்கு பேக் போல நீங்கள் போட்டுக் கொள்ளலாம். இதனால் சருமம் எப்பொழுதும் மினுமினுப்பாக ஜொலிப்புடன் இருக்கும்.

- Advertisement -

4. தயிர்:
தயிர் முதுமை தன்மையை விரட்டி அடித்து எப்பொழுதும் இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும் ஒரு அற்புதமான பொருளாக இருக்கிறது. இது அதிகப்படியாக இருக்கும் ஈரப்பதத்தை சமன் செய்ய துணை புரியும் மேலும் சருமத்தில் இருக்கும் ஹைட்ரேட் பிரச்சனையையும் சீர் செய்யும். முகத்தில் இருக்கும் தோல் பகுதியை நெகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். எல்லா பாகமும் ஒரே மாதிரியான ஈவன் டோனாக இருக்கவும் உதவி செய்யும். இது ஒரு ப்ளீச்சிங் போல செயல்படும்.

இதையும் படிக்கலாமே:
வெறும் பத்து ரூபாய்க்கு ரோஜாவை வாங்கி இப்படி மட்டும் செய்து பாருங்க, உங்க முகத்துக்கும், ரோஜா இதழுக்கும் வித்தியாசமே தெரியாது. அந்த அளவுக்கு கலரா மாறிடுவீங்க.

5. மஞ்சள்:
மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதில் நம்முடைய சருமத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எப்பொழுதும் பொலிவுடன் வைத்துக் கொள்ள பெருமளவு உதவி செய்யும். மஞ்சள் உடன் கடலை மாவு, பால், தயிர் போன்றவற்றை சேர்த்து நீங்கள் பேக் போல வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் உங்களுடைய முகத்தில் நீங்கள் சற்றும் எதிர்பாராத ஜொலிப்பு கிடைக்கும்.

- Advertisement -