ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் முடி உதிர்வை உடனடியாக நிறுத்தி, பசுமையான முடி வளர்ச்சியைக் கொடுக்கும் பச்சைப்பயிறு.

hair
- Advertisement -

பசுமையான முடி வளர்ச்சியா? முடி கறுப்பாக தானே வளரும் என்று யோசிக்கிறீர்களா. பசுமையாக வளரக்கூடிய எல்லா பொருட்களும் கடகடன்னு துளிர்க்க ஆரம்பிக்கும். அதேபோல்தான் இந்த பச்சை பயிறு ஹேர் பேக்கை போட்டு வந்தால் உங்களுடைய தலைமுடியும் கடகடவென வளரத் தொடங்கும். அதுவும் போஷாக்குடன். முடி வளரத் தொடங்கியதும், வலுவாக இல்லாமல் உதிர்ந்து விட்டால் அதன் மூலம் நமக்கு எந்த பயனும் இருக்காது. ஆகவே முடி வளர்ச்சியும் இருக்க வேண்டும். அந்த முடி வளர்ச்சி ஸ்ட்ராங்காகவும் இருக்க வேண்டுமென்றால் இந்த ஹேர் பேக் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இந்த ஹேர் பேக்கை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

இந்த பேக்குக்கு நமக்கு தேவையான பொருட்கள். முளை கட்டிய பச்சைபயறு – 1 கப், சின்ன வெங்காயம் தோலுரித்து – 5 பல், 1 – முட்டையின் வெள்ளைக்கரு, இந்த மூன்று பொருட்கள் மட்டும் தான் தேவை. முதலில் பச்சை பயிரை ஒரு முறை கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 8 மணிநேரம் ஊறவைத்து விடுங்கள்.

- Advertisement -

நன்றாக ஊறிய பச்சை பயிறை தண்ணீரிலிருந்து வடிகட்டி விட்டு, ஒரு வெள்ளைத் துணியில் வைத்து முடிச்சு போட்டு அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்து விட்டால் அந்தப் பயறு முளைக்கத் தொடங்கிவிடும். முளைக்கட்டிய இந்த பச்சை பயிரை அப்படியே சாப்பிட்டாலும் முடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த பச்சை பயிரை தான் ஹேர் பேக் செய்ய பயன்படுத்த போகின்றோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். ஊறவைத்து முளைகட்டிய பச்சைப்பயறு – 1 கப், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 5 பல், இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து தனியாக ஒரு பவுலுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அரைத்த விழுதில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான். நமக்கு தேவையான சூப்பரான ஹார்பர் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த பேக்கை தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் ஸ்கால்ப்பில் முதலில் இந்த பேக்கை நன்றாக படும்படி போட்டுக்கொள்ளுங்கள். மண்டை ஓட்டில் முடிகளை வேரூன்றி வளர செய்ய இந்த பேக் நமக்கு அவசியம் தேவை. மீதம் இருக்கக்கூடிய ஹேர் பேக்கை முடியின் நுனி வரை அப்ளை செய்து அப்படியே 30 நிமிடங்கள் தலையில் ஊற விட்டு விடுங்கள். அதன் பின் ஷாம்பு போட்டு தலையை சுத்தமாக அலசி விடுங்கள்.

இந்த பேக்கை நாம் வடிகட்ட வில்லை. ஆகவே தலையில் எந்த ஒரு தூசும் இல்லாத அளவிற்கு தண்ணீர் ஊற்றி கவனமாக அலச வேண்டும். அப்படி இல்லை என்றால் சில சமயம் சுண்டுபிடிப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இந்த பேக்கை தாராளமாக பயன்படுத்தலாம். வாரத்தில் இரண்டு நாள் முளைக்கட்டிய பயிறு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும் சரும அழகிற்கும் மிகமிக நல்லது. உங்களுக்கு இந்த பேக் பிடிச்சு இருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -