வளர்ச்சி தடைப்பட்ட செடிகள் மற்றும் பூக்கள் குறைவாக பூக்கும் செடிகளுக்கு இந்த பழ உரத்தை இப்படி மட்டும் போடுங்கள் தகிக்கும் கோடையிலும் தாறுமாறாக பூக்கும்!

rose-malli-mulam

நாம் வளர்க்கும் செடி வகைகளில் ஒரு சில செடிகள் வைத்தவுடன் நன்கு செழித்து வளரத் துவங்கும் ஆனால் ஒரு சில செடிகள் இலைகள் மட்டுமே துளிர்விடும். அதில் பூக்கள் பூக்க செய்யாது. நன்கு பூத்த செடிகளும் குறைவாக சில சமயங்களில் பூக்கும். அதிக அளவில் மலர்களை கொடுத்து வந்த செடிகளும் இது போல் குறைவாக பூக்களை கொடுக்கும் பொழுது அங்கு சத்துக் குறைபாடு இருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லா செடிகளும் எல்லா காலத்திலும் செழிப்பாக வளர்வதில்லை. காலத்திற்கு ஏற்ப தகுந்த உரங்களைக் கொடுக்க வேண்டும்.

rose2

மழைக்காலத்தில் அதிக பூக்களை கொடுத்த செடிகள் வெயில் காலத்தில் பூக்களை கொடுக்கவில்லை என்றால் அங்கு வெப்பத்தின் தாக்கம் செடிகளை பாதிக்கிறது என்பதை உணர்ந்து அதற்குரிய ஊட்டசத்து உரங்களைக் கொடுத்து வந்தால் போதும். செடிகள் வழக்கம் போல அதிகமான பூக்களை நமக்கு வாரி வழங்கும். இப்படி வளர்ச்சி தடைப்பட்ட செடிகளும், பூக்கள் குறைவாக பூக்கின்ற செடிகளும் மீண்டும் தன் நிலையை அடைந்து கொத்துக் கொத்தாக பூக்களை கொடுக்க இதைவிட சிறந்த உரம் இருக்க முடியாது.

இதற்கு காசு கொடுத்து வெளியில் எந்த ஒரு உரத்தையும் வாங்கி போட வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் சில பொருட்கள் கூட அத்துணை சத்துக்கள் மிகுந்ததாக இருக்கின்றது. அவற்றை குப்பையில் வீணாக தூக்கி எறியாமல் செடி, கொடிகளுக்கு உரமாக மாற்றி கொடுக்க முடியும். சற்று சிரமம் பார்க்காமல் பத்து நிமிடம் இதற்கென நேரம் ஒதுக்கினால் எல்லா வகையான பூச்செடிகளும் பெரிது பெரிதாக, அடர்த்தியான நிறத்துடன், கொத்துக் கொத்தாக பூக்களைக் கொடுக்கும். சரி அதை எப்படி செய்வது? என்பதை இனி வரும் பத்திகளில் காண்போம் வாருங்கள்.

mulam-fruit

நீங்கள் சீசனுக்கு ஏற்ப வாங்கும் பழ வகைகளில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை. கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த பழ வகை நிறைய விட்டமின்களை கொண்டுள்ளது. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்துள்ள இந்த பழம் முலாம்பழம் என்று கூறப்படும், கிர்ணி பழம் என்றும் கூறுவது உண்டு. இந்த பழம் பல வகைகளை கொண்டுள்ளது. அதில் எந்த வகையாக இருந்தாலும் சரி, அவற்றை சுவைத்துவிட்டு நீங்கள் தூக்கி எரியும் சக்கைகளும், விதைகளும் உங்கள் வீட்டு செடிகளுக்கு நல்ல உரமாக மாறும்.

தூக்கி எரியும் முலாம் பழத்தின் தோல் பகுதி, சதை பகுதி மற்றும் விதைகள் அத்தனையும் சத்துக்கள் கொண்டுள்ளது. எனவே அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். நாட்டு சர்க்கரை இல்லை என்றால் வெல்லம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கைகளால் கலந்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அல்லது மண் பானையில் போட்டு காற்றுப் புகாதபடி மூடி வைத்துக் கொள்ளுங்கள்.

plant-spray

20 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் அதில் நுண்ணுயிரிகள் பெருகி இருக்கும். இந்த நுண்ணுயிரிகள் கலந்த கலவையை வடிகட்டி அதனுடன் 10 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை மாதம் ஒருமுறை உங்களுடைய பூச்செடிகளுக்கும், காய், கனி செடிகளுக்கும் தெளித்து வந்தால் எத்தகைய தகிக்கும் கோடை வெயிலிலும் செடி, கொடிகள் வறட்சியின்றி பூத்துக் குலுங்கும். 10 லிட்டர் தண்ணீருடன் சேர்க்கும் பொழுது எறும்பு தொந்தரவு வரும் வாய்ப்புகள் குறைவு தான், எனினும் அதையும் மீறி எறும்புகள், பூச்சிகள் தொந்தரவு இருந்தால் வேப்பம் புண்ணாக்கு சிறிதளவு தெளித்து விடுங்கள்.