ஒரு துண்டு முலாம் பழம் இருந்தா அதை வைத்து இப்படி பேக் போட்டு பாருங்க. உங்க முகம் தங்கம் போல தகதகவென்று ஜொலித்து தேவதை போல வலம் வரலாம்.

- Advertisement -

முகத்தின் நிறத்தை அதிகரிக்க பலவகையான இயற்கை வழிமுறைகள் உள்ளது. அதிலும்  வெயில் காலத்தில் வரக் கூடிய இந்த முலாம் பழத்தை வைத்து இந்த வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை எல்லாம் சரி செய்து அழகு தேவதையாக ஜொலிக்க செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் மூலாம் பழத்தை வைத்து ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

முகம் வெள்ளையாக மூலாம் பழம் ஃபேஸ் பேக்:
இதற்கு முதலில் முலாம் பழத்தை வாங்கி அதில் இருக்கும் விதைகளை எல்லாம் நீக்கிய பிறகு சதை பகுதிகளை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பயன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பவுலில் ரெண்டு ஸ்பூன் முலாம் பழ சாறு, இத்துடன் இரண்டு ஸ்பூன் பால் பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்த கொள்ளுங்கள். அடுத்து முகத்தை சுத்தம் செய்த பிறகு இந்த பேக்கை முகத்தில் போட்டு 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இந்த பேக்கை எல்லா சருமத்தினருமே பயன்படுத்தலாம்.

அடுத்ததாக இதே போல் ஒரு பவுலில் ரெண்டு ஸ்பூன் முலாம்பழ சாறு சேர்த்து, இத்துடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு மட்டும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சேர்க்க வேண்டாம். மேலும் இத்துடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து இதே போல் 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். இந்த பேக் ஆயில் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தி வரும் பொழுது முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து முகம் எப்போதும் பொலிவுடன் காணப்படும்.

- Advertisement -

அடுத்து ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் முலாம்பழ சாறு, இத்துடன் அரை ஸ்பூன் தேன் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சுத்தம் செய்து விடலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரும் பொழுது முகத்தில் இருக்கும் வறட்சித் தன்மை நீங்கி முகம் நல்ல பொலிவுடன் இருக்கும்.

இதே போல மூன்று ஸ்பூன் முலாம் பழச்சாறு, அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் ஒரு அரை மணி நேரம் இதை மாஸ்க் போல போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு லேசாக தண்ணீர் தொட்டு முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து அதன் பிறகு முகத்தை அளம்பி விடுங்கள். இந்த முறையை நீங்கள் வாரம் ஒரு முறை மட்டும் செய்தாலே போதும் முகத்தில் இருக்கும் கருமை நிறம் கருத்திட்டுகள் எல்லாம் மறைந்து முகம் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: முகத்திற்கு நெய் தடவினால் இதெல்லாமா நடக்கும்? சருமத்திற்கு நெய்யினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன?

முலாம் பழத்தை வைத்து முகத்திற்கு இத்தனை அழகு குறிப்புகள் செய்ய முடியும் என்பது ஆச்சரியமான தகவல்களாக இருக்கலாம். ஆனால் இந்த பழத்தை வைத்து பேக் போடும் போது முகம் இயற்கையாகவே முகம் நிறம் கூட்டுவதுடன், நல்ல பொலிவையும் பெற முடியும். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -