இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து புதினா சட்னி அரைத்து கொடுத்துப் பாருங்கள். ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை கூட ஐந்து இட்லியை சாதாரணமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

நம் பாரம்பரியமாக செய்து வரும் உணவுகளில் புதினாவும் ஒன்று. இந்த புதினாவை வைத்து செய்யப்படும் சட்னி, துவையல் போன்றவற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சுவையில் இருக்கும். ஆனாலும் நிறைய பேருக்கு இந்த புதினா சட்னி என்பது அந்த அளவிற்கு விருப்பமான ஒன்றாக இருக்காது. இப்போது இதில் குறிப்பிட்ட உள்ள பொருட்களை வைத்து நீங்கள் புதினா சட்னி அரைத்து பாருங்கள். இனி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த புதினா சட்னி ஒரு விருப்பமான ரெசிபியாக மாறி விடும் அந்த அளவிற்கு இதன் சுவை நன்றாக இருக்கும்.

தேவையான பொருள்: எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, புதினா – ஒரு கட்டு, பூண்டு தோல் உரிக்காதது – 5 பல், புளி – சிறிய எலுமிச்சை அளவு, வெங்காயம் – ஒரு (மீடியம் சைஸ் நீள வாக்கில் நறுக்கியது). பாதாம் – 5, சர்க்கரை – 1 ஸ்பூன், உப்பு – 1/2 அரை ஸ்பூன்.

- Advertisement -

முதலில் புதினா இலைகள் கிள்ளி எடுத்து நன்றாக இரண்டு தண்ணீர் விட்டு சுத்தம் செய்து நீரை வடித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து விடுங்கள். பேன் சூடானதும் எண்ணையை ஊற்றி அதில் பச்சை மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு பூண்டையும் சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் போட்டு லேசாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை லேசாக வதங்கினாலே போதும்.

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அலசி எடுத்து வைத்த புதினாவை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். புதினாவை சேர்த்த பிறகு புதினா வதங்கிய வாசம் நன்றாக வரும் அது வரை வதக்க வேண்டும். அதன் பிறகு புளி சேர்த்து லேசாக ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடுங்கள் இது அப்படியே நன்றாக ஆறட்டும்.

- Advertisement -

இப்போது வதக்கிய அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு சட்னிக்கு தேவையான உப்பையும் சேர்த்த பிறகு இப்போது தான் அந்த சீக்ரெட் இங்கிரடியன்ஸ் சேர்க்க வேண்டும். அதாவது ஐந்து பாதாம் ஒரு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இது இரண்டையையும் சேர்த்து அரைக்கும் போது புதினாவின் சுவை பிரமாதமாக இருக்கும். (தேவைப்பட்டால் இதில் ஒரு துண்டு தேங்காய் சேர்த்தும் அரைத்து கொள்ளலாம்). அவ்வளவு தான் சுவையான புதினா சட்னி தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: வெளியூரில்தங்கி படிக்கும் வேலை செய்பவர்களுக்காகவே வெங்காயம், தக்காளி, காய்கறி ஏன் கறிவேப்பிலை கூட சேர்க்காமல், சூப்பரான ஒரு பூண்டு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்துக் கொள்ளுங்கள். தாளிக்கவில்லையென்றால் கூட இந்த சட்னி சுவையில் மாற்றம் இருக்காது. சிலருக்கு இந்த தாளிப்பு இருந்தால் தான் சாப்பிட திருப்தியே இருக்கும். அப்படி நினைப்பவர்கள் தாளித்தும் சாப்பிடலாம்.

- Advertisement -