முன்நெற்றியில் முடிகள் உதிர்ந்து தலையில் எட்டி பார்க்கும் வழுக்கையை கூட மறைய செய்து அசுர வேகத்தில் வளர வைக்க வல்லாரையுடன் இதை சேர்த்து போடுங்கள். இனி ஒரு முடி கூட உதிராது.

mun netri vallarai keerai
- Advertisement -

முடி உதிர்வது ஒரு பெரிய பிரச்சனை என்றால் சிலருக்கு இந்த முன் நெற்றியில் மட்டும் முடி உதிர்ந்து கொண்டு செல்லும். இதனால் அவர்களின் தலை முடி ஏறிக் கொண்டு சென்று பார்க்கவே அசிங்கமான தோற்றத்தை தரும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் நாளடைவில் அந்த இடங்களில் எல்லாம் முடி வளராமல் வழுக்கையாக மாறி விடக் கூடிய சூழ்நிலையும் உருவாகும். இதையெல்லாம் சரி செய்யக் கூடிய ஒரு அருமையான ஹேர் பேக்கை தான் இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முன் நெற்றியில் உதிர்ந்த முடிகள் மீண்டும் வளர:
முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடிகள் வளர நாம் இரண்டு வழிமுறைகளை பற்றி இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஒன்று ஒரு ஆயில் மசாஜ். அதன் பிறகு முடிக்கான ஹேர் பேக் இரண்டையும் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் ஆயில் தயாரிக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒரு பவுலில் சேர்த்து அதை டபுள் பாய்லிங் முறையில் லேசாக சூடு படுத்திய பிறகு தலையில் தேய்த்து மைல்டாக மசாஜ் கொடுங்கள். எந்த இடங்களில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் இந்த எண்ணெய் கொஞ்சம் அதிகமாக தேய்த்து மசாஜ் கொடுங்கள். இதை இரவு உறங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக செய்தால் சரியாக இருக்கும்.

அடுத்த நாள் காலையில் ஒரு ஹேர் பேக்கை தயார் செய்து போட வேண்டும். அதற்கு பத்து சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், ஒரு டீஸ்பூன் வல்லாரை பொடி இதற்கு இயற்கையான வல்லாரை கிடைத்தால் அதையும் ஒரு கைப்பிடி சேர்த்துக் கொள்ளலாம். இவை மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து அதை தலையில் பேக்காக போடுங்கள். இதை போடும் போதும் எங்கெல்லாம் உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது அந்த இடத்தில் கொஞ்சம் கூடுதலாக போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது அரைமணி நேரம் வரை உங்கள் தலையில் அப்படியே ஊற விடுங்கள் அதன் பிறகு நல்ல தரமான ஷாம்பூ சீயக்காய் ஏதேனும் ஒன்று போட்டு தலை முடியை சுத்தமாக அலசி விடுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்து வரும் போது முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடிகள் முளைக்கும். அது மட்டும் இன்றி தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிய முடிகள் வரும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை எளிதாக விரட்டி அடிக்க 1 ஸ்பூன் உளுந்து இருந்தால் போதுமே! முகக் கருமை நீங்க எளிய டிப்ஸ் என்ன?

முன்நெற்றி முடிகள் உதிரும் பிரச்சனைக்கு இந்த பேக் ஒரு அருமையான ரிசல்ட்டை கொடுக்கும். உங்களுக்கும் இது போல முன்நெற்றி முடி உதிர்வு பிரச்சனைகள் இருந்தால் இந்த பேக்கை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -