இது மட்டும் உங்ககிட்ட இருந்தா போதும், முன் நெற்றியில் முடி உதிரும் பிரச்சனை இனி உங்கள் வாழ்நாளில் வரவே வராது. எளிமையான ரெமெடி மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்றைய தலைமுறையினருக்கு பெரிய சவாலான ஒன்று தான். சாதாரணமாக முடி உதிர்ந்தாலே, பெரிய அளவில் கவலை கொள்ளும் நாம் முன் நெற்றியில் முடி உதிர்ந்து விட்டால், அதை பற்றி சொல்லவே தேவையில்லை காரணம் முன் நெற்றியில் முடி விழும் போது, வயதான தோற்றத்துடன், பார்க்கவும் அசிங்கமாக இருக்கும். இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 20 லிருந்து 30 முடிகள் வரை உதிர்வது சாதாரணமான ஒன்று தான். அதற்கு மேலும் முடி உதிரும் போது நாம் கட்டாயமாக அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய முக்கியமாக செய்ய வேண்டியது அந்த இடத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு இந்த எண்ணெய் பெரிய அளவில் உதவி செய்யும். இதை எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எண்ணெய் தயாரிக்க நமக்கு ரோஸ் மேரி இலைகள் தேவை. ஒரு வேளை உங்களிடம் இந்த இலை இல்லை என்றால் ரோஸ் மேரி பவுடர், ஆயில் இரண்டும் கிடைக்கும். இது அழகு சாதன பொருட்கள் விற்கும் கடைகள் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும்.

நல்லெண்ணெய் 200 கிராம் எடுத்து கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவு ரோஸ் மேரி இலைஒரு வெற்றிலை இவைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் ரோஸ் மேரி இலை அல்லது பவுடர் உங்களிடம் எது உள்ளதோ அதை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து அதையும் நன்றாக சூடு படுத்துங்கள். கடைசியாக வெற்றிலையும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு, இந்த சாறு முழுவதும் எண்ணெயில் இறங்க அப்படியே வைத்து விடுங்கள். இந்த எண்ணெய் ஆறிய பிறகு இன்னொரு பாட்டிலில் வடிகட்டாமல் ஊற்றி எடுத்து கொள்ளுங்கள்.

பாட்டிலில் ஊற்றிய இந்த எண்ணெயில் இரண்டு நாட்கள் நல்ல வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய வெளிச்சம் இதில் படும் போது இதற்கான பலன் என்னும் அதிகமாகவே கிடைக்கும். அதன் பிறகு இதை தினமும் முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் செய்து அதன் பிறகு குளித்து விடுங்கள். இதை தேய்த்த பிறகு அப்படியே உங்கள் தலையில் இருந்தாலும் எந்த பிரச்சனையும் கிடையாது அது உங்கள் விருப்பத்தை பொருத்து.

- Advertisement -

கறிவேப்பிலைக்கு முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய சக்தி உண்டு. அதை விட பல மடங்கு ஆற்றல் இந்த ரோஸ் மேரி இலைகளுக்கு உண்டு. இவற்றுடன் வெற்றிலையை சேர்க்கும் போது முடி உதிர்ந்த இடத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய முடிகள் வளர உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் பெண்கள் இதையெல்லாம் செய்வதால் கூட, அவர்களுக்கு சீக்கிரமே முதுமை தோற்றம் வந்து விடுமாம் தெரியுமா?.

இந்த எளிய முறையில் எண்ணெய் தயாரித்து முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகளை சுலபமாக வளர வைத்து விடலாம். இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி உதிர்வு பிரச்சனையே இருக்காது.

- Advertisement -