இந்த ஜெல்லை பயன்படுத்துபவருக்கு இனி முன் நெற்றியில் வழுக்கை விழாது, அதற்கு பதிலாக புதிய முடிகள் தான் அழகாக சுருண்டு விழும்.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனை என்பது இப்போதெல்லாம் மிக சாதாரணமான ஒன்றாக விட்டது. அதிலும் இந்த முன் நெற்றியில் மட்டும் முடி விழுந்து வழுக்கை ஏற்படுவது என்பது கொஞ்சம் கவலைக்குரிய விஷயம் தான். இப்படி வழுக்கை விழுவது என்பது உடனடியாக யாருக்கும் ஏற்பட்டு விடாது. அலர்ஜி அல்லது நம் உடம்பில் ஏதாவது சத்துக் குறைபாடு போன்றவைகள் கூட இந்த முன் நெற்றி வழுக்கை விழுவதற்கு காரணமாக இருக்கலாம். அத்தோடு இன்றைய இந்த சூழலும் மிக முக்கியமான காரணம் சரி காரணம் எதுவாக இருந்தாலும் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றிய குறிப்பு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஜெல்லை தயாரிக்க ஆளி விதை 2 டேபிள்ஸ்பூன், செம்பருத்திப்பூ 10, ஆலுவேரா ஜெல் 1 டீஸ்பூன். இந்த ஆலுவேரா ஜெல் வெள்ளை நிறத்தில் உள்ளதை தான் பயன்படுத்த வேண்டும் கலர் சேர்த்து ஜெல்லை இதற்கு பயன்படுத்தக் கூடாது அதே நேரத்தில் இயற்கையான ஜெல்லும் சேர்க்க வேண்டாம். ஆனால் அது சீக்கிரம் கெட்டுப் போகும் வாய்ப்பு அதிகம்.

- Advertisement -

இதில் ஆளி விதைகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும். செம்பருத்தி பூ முடி வளர்ச்சிக்கு உதவி செய்வதுடன் இளநரை வராமல் தடுக்கும் புதிய முடிகள் நல்ல கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த செம்பருத்திப் பூ மிகவும் உதவியாக இருக்கும் இதில் சேர்க்கப்படும் ஆலுவேரா ஜெல் நம் ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து கொடுக்கும். இந்த மூன்றையும் ஒன்றாக சேர்ந்து இந்த ஜெல்லை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

இந்த முடி உதிர்வை தடுக்கும் ஜெல்லை தயாரிக்க முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது ஆளி விதையை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் வரை கொதித்த பிறகு செம்பருத்தி பூக்களை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி பூக்களை கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் கூட தவறில்லை, இரண்டும் சேர்ந்து நன்றாக கொதித்து ஒரு ஜெல் போல வந்து விடும் மிக கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டாம். ஓரளவுக்கு ஊற்றும் பதம் இருந்தாலே போதும்.

அடுப்பை அணைத்து விட்டு, உடனே இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஆறி விட்டால் வடிகட்டி ஜெல்லை தனியாக எடுக்க முடியாது. எனவே சூட்டுடன் இருக்கும் போதே வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டி எடுத்தவுடன் ஆலிவேரா ஜெல்லையும் இதே போல் அந்த ஜெல் சூட்டுடன் இருக்கும் போதே அதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஆறிய பிறகு அதையும் சேர்த்து கலக்க முடியாது.

- Advertisement -

இந்த ஜெல்லை தினமும் இரவு தூங்க செல்லும் போது உங்கள் தலையில் எந்த இடத்தில் முடி உதிர்ந்து இருக்கிறது அங்கே இந்த ஜெல்லை தடவி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இளமையாக இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்களுக்கான சூப்பர் டிப்ஸ். இதை பயன்படுத்திய பிறகு உங்க வயதுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு இளமையா மாறிடுவீங்க. மிஸ் பண்ணிடாதீங்க.

அடுத்த நாள் காலை லேசாக தண்ணீர் வைத்து துடைத்தாலே போதும் இந்த ஜெல் வந்து விடும். தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முடி உதிர்வு பிரச்சனை கூட சரியாகி விடும். உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை உங்களுக்கு இருந்தால் இந்த முறையால் நல்ல பலனை தரலாம் .

- Advertisement -