இளமையாக இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்களுக்கான சூப்பர் டிப்ஸ். இதை பயன்படுத்திய பிறகு உங்க வயதுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு இளமையா மாறிடுவீங்க. மிஸ் பண்ணிடாதீங்க.

- Advertisement -

முகம் எப்போதும் பிரகாசமாகவும், மெருகுடனும், அழகாகவும் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் இருப்பார்களா என்ன. இப்படி முகச்சுருக்கம் நீக்கி முகப்பொலிவுடன் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டி நாம் அதிகப்படியான கிரீம்கள், பார்லர் என்று செலவு செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் இவை அனைத்துமே தற்காலிக தீர்வு தான். அது மட்டும் இன்றி இவை அனைத்திலும் கெமிக்கலும் கலந்து இருக்கும். கெமிக்கல் இல்லாமல் முகத்திற்கான ஒரு ஸ்பெஷல் கிரீமை நாம் வீட்டிலே செய்து வைத்துக் கொண்டு தினமும் பயன்படுத்துவதால் இதைப் போன்ற கிரீம்கள் பயன்படுத்துவதை காட்டிலும் கூடுதல் அழகை பெற முடியும் என்றால் வேண்டாம் என்றா கூற போகிறார்கள். இதோ அப்படி ஒரு கிரீம் செய்வதற்கான வழிமுறை பதிவு தான் இது.

இந்த குறிப்புக்கு பயன்படுத்த பாதாமை எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஊறிய பாதாமின் மேல் தோலை நீக்கி விட்டு உரித்த பாதாம் பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பாதாம் கொஞ்சம் கொரகொரப்பாக அரைப்பட்டு இருக்கும். அதன் பிறகு அதில் கால் கப் ரோஸ் வாட்டர் கலந்து நல்ல பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த அந்த பேஸ்ட்டை பில்டர் செய்து அதில் உள்ள சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது ஒரு சிறிய பவுல் எடுத்த கொள்ளுங்கள் அதில் வடித்து எடுத்த பாதாம் பால், விட்டமின் இ கேப்சூல் மூன்று எடுத்து அதையும் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன், ஆலு வேரா ஜெல் 2 டீஸ்பூன், அனைத்தையும் சேர்ந்து நன்றாக கலந்தால் நல்ல கெட்டியான கீரிம் பதத்திற்கு வந்துவிடும்.

இதை தினமும் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பிய பிறகு நீங்கள் உறங்க செல்லலாம்.

- Advertisement -

பாதாம் பாதாம் எண்ணெய் இதை அனைத்துமே முகத்தில் சுருக்கத்தையும் வயதான தோற்றத்தையும் தடுக்கும் அற்புத ஆற்றல் உடையது. இந்த கீரிம் ஒருமுறை செய்து வைத்து கொண்டால் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதை நீங்கள் பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.

இந்த பாதாம் க்ரீம் பேக்யை தினமும் பயன்படுத்தி வருவதால் உங்கள் முகச் சுருக்கம் மறைந்து என்றும் இளமை தோற்றத்துடன் பிரகாசிக்கலாம்.

- Advertisement -