தலையில் வழுக்கை ஏற்படாமல் தடுக்க ஹேர் பேக்

mun netri pack
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் 50 வயதுக்கு மேல் தான் வழுக்கை என்ற ஒன்றே ஏற்படும். ஆனால் இன்றைய காலத்தில் 20 வயதை தாண்டும் பொழுதே முன் நெற்றியில் இருக்கக்கூடிய முடிகள் உதிர ஆரம்பித்து நெற்றி அகலமாகிக் கொண்டே செல்கிறது. இதை அப்படியே விட்டு விட்டால் வழுக்கை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். எப்பொழுது முன்னேற்றியில் இருக்கக்கூடிய முடிகள் உதிர ஆரம்பிக்கிறதோ அப்பொழுதே நாம் அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளும் பொழுது மேலும் முடி உதிராமல் தடுத்து உதிர்ந்த இடத்தில் புதிய முடிகளை வளர செய்ய முடியும். இதை எந்தவித கெமிக்கலும் கலக்காமல் இயற்கையான முறையில் செய்ய முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முன் நெற்றியில் இருக்கக்கூடிய முடிகள் வளர்வதற்குரிய ஹேர் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முடி உதிர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பது கவலைப்படுவது தான். மன அழுத்தம் நிறைந்து இருப்பவர்களுக்கு அதிகமான அளவு முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படும் அதோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலருக்கு வம்சாவளி அடிப்படையிலும் முன்னெச்சியில் வழுக்கை விழுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

முன்னேற்றியில் வழுக்கை விழுந்தாலும் சரி அல்லது தலையின் பின்புறத்தில் வழுக்கை விழுவது போல் தோன்றினாலும் சரி எப்பொழுது முடிகள் அந்த இடத்தில் அதிகமாக உதிர ஆரம்பித்து அடர்த்தி குறைய ஆரம்பிக்கிறதோ அப்பொழுது இந்த ஹேர் பேக்கை நாம் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் கண்டிப்பான முறையில் மேற்கொண்டு முடி உதிர்வதையும் தடுக்க முடியும். உதிர்ந்த இடத்தில் புதிதாக முடியை வளரவும் செய்ய வைக்க முடியும்.

இந்த ஹேர் பேக்கை தயார் செய்வதற்கு முதல் நாள் இரவே இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை சுத்தம் செய்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஆறு சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை அதில் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றிவிட்டு அதனுடன் நான்கு ஸ்பூன் தயிர் சேர்த்து பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலந்த இந்த பேக்கை நம்முடைய தலைமுடியில் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவ வேண்டும். எந்த இடத்தில் முடி உதிர்தல் அதிகமாக ஏற்பட்டிருக்கிறதோ எந்த இடத்தில் முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதோ அந்த இடத்தில் நம்முடைய விரல்களை வைத்து குறைந்தது ஐந்து நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.

இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் முடி உதிர்தலை தடுத்து நிறுத்தக்கூடிய பொருட்களாகவே திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக வெங்காயம் முடி உதிர்ந்த இடத்தில் திரும்பவும் புதிய முடியை வளர வைக்க உதவுகிறது. இந்த ஹேர் பேக்கை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சினை சரியாவதோடு மட்டுமல்லாமல் புதிதாக முடியும் வளர ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் பொடுகு பிரச்சனையும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: அடர்த்தியான கருமையான முடி வளர்ச்சிக்கு சங்குப்பூ

மிகவும் எளிதில் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தியே வழுக்கை தலை ஏற்படாமல் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -