ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்

muneeswaran

இந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய முனீஸ்வரன் உக்ர தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். இவரை வழிபடும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக பல அற்புத பலன்களை பெறலாம். இதோ அந்த அற்புதமான முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்.

muneeswaran

முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்.

பொது பொருள்:
வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரரே. உங்களை மனமுணுக்கி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
தினமும் விளக்கேற்றுகையில் இதை கூறினால் அதிஷ்டம் வந்து சேரும்

முனீஸ்வரனை வழிபடும் சமயத்தை மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக எந்த வித ஆபத்தும் நம்மை நெருங்க முடியாத அளவிற்கு அவர் நம்மை காப்பார். அதோடு நமக்கு தெரியத்தையும் பேராற்றலையும் அவர் தருவார்.