எவ்வளவு பெரிய எதிரிகளாக இருந்தாலும், அவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாமல் காக்கும் தெய்வம் முனீஸ்வரர். முனீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு பகைவர்களின் தொல்லை இருக்காது என்பார்கள். சக்தி வாய்ந்த இந்த குலம் காக்கும் முனீஸ்வரரை வழிபட்டு எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
தென்னிந்திய மக்களால் அதிகம் வழிபடப்படும் ஒரு குலதெய்வம் முனீஸ்வரர்! முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தை வழங்கியவர் என்பதால் முனீஸ்வரர் பட்டம் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. பரமேஸ்வரனின் மெய்காவலர்களில் முதன்மை பெற்று விளங்கும் இவர், ஆக்ரோஷமுடன் காணப்படுகிறார். கையில் அரிவாள் ஏந்தி தன்னை நம்பி வந்தவர்களை, அரண் போல் நின்று காக்கும் கலியுக கடவுளாகவும் இருக்கிறார்.
கலியுகத்தில் ஒருவருக்கு பகை, துன்பம், அவமானம் போன்றவை எப்படியும் வரக்கூடும். இவர்கள் முனீஸ்வரரை வழிபட்டு வந்தால், வந்த துன்பமெல்லாம் தவிடு பொடியாகும் என்பது நம்பிக்கை. மலேசியா, இலங்கை மற்றும் தென்னிந்திய பகுதிகளில் அதிகம் முனீஸ்வர வழிபாடு இருந்து வந்துள்ளது. கடந்த பத்து வருடத்தில் இவரின் வழிபாடு குறைந்துவிட்டது என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.
முனீஸ்வரர் பஞ்ச முனீஸ்வரர், சப்த முனீஸ்வரர், ஜடாமுனிஸ்வரர், மகாமுனிஸ்வரர் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறார். முனீஸ்வரன் கோவிலில் மந்திரிச்ச கயிறு வாங்கி வந்து கட்டிக் கொண்டால் பயந்து அழும் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை. இவரின் அறிவாளில் சொருகப்பட்ட எலுமிச்சையை வாங்கி வந்து பிழிந்து தண்ணீருடன் குடித்தால் சகலவிதமான நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இவ்வளவு சக்திகள் வாய்ந்த இந்த முனீஸ்வரருக்கு செவ்வாய், ஞாயிறு, சனி ஆகிய கிழமைகளில் எலுமிச்சை மாலை கோர்த்து வைத்து அவருக்கு சாற்றி நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் உங்களுக்கு எதிரிகளால் தொல்லைகள் அதிகமாக இருந்தால், உங்களுடைய பகைவர்கள் மூலம் உங்களுக்கு தொந்தரவுகள் இருந்தால் சனிக்கிழமையில் ராகுகால வேளையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். சனிக்கிழமையில் காலை 9.00 மணி முதல் 10:30 மணி வரையிலான ராகு காலத்தில் முனீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள முனீஸ்வரருக்கு நெய் தீபம் போட்டு ஏற்றி வையுங்கள். புதிய அகல் விளக்குகளில் நெய் விட்டு இரண்டு தீபங்கள் ஏற்றுங்கள். பின்னர் முனீஸ்வரருக்கு 21 அல்லது 108 ஆகிய எண்ணிக்கையில் எலுமிச்சைகளை மாலையாக கோர்த்து முனீஸ்வரருக்கு சாற்றி மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பணம் சேர பர்ஸ் டிப்ஸ்
இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் இதை செய்து வர எதிரிகளின் தொல்லை இனி உங்களுக்கு இல்லை என்று நம்புங்கள். நமக்கு தொல்லை கொடுத்து வரும் பகைவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க கூடியவர் முனீஸ்வரர். முனீஸ்வரருக்கு சுருட்டு, நாட்டு சாராயம், ஜவ்வாது, புனுகு ஆகியவற்றை படைத்து ஆடு, கோழி, சேவல் என்று பலியிட்டு பல விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகுந்த பக்தியுடன் வழிபடுவார்கள். சிலர் தங்கள் குலதெய்வமாக இருக்கக்கூடிய முனிஸ்வரருக்கு வீட்டு கொல்லைப்புறத்தில் மரத்தின் அடியில் அர்த்த ஜாமத்தில் இது போல அவருக்கு பிடித்தமான பொருட்களை படைத்து, பலி கொடுத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஒவ்வொரு வருடமும் இது போல தொடர்ந்து முனீஸ்வரர் பூஜை செய்து வருபவர்களுக்கு பகைவர்களால் ஒருபோதும் தடை வராது. தொழில் ரீதியாக தொடர் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பம் அமைதியாக மகிழ்ச்சியுடன் காணப்படும்.