முன்னேற்றம் தரும் நட்சத்திர வழிபாடு

natchathira valipadu
- Advertisement -

முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதற்காக முயற்சிகளை மேற்கொண்டாலும், ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த முயற்சிகள் தடைப்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் எதற்காக பிறந்தோம் என்று வருத்தப்படுபவர்கள் அனைவரும் அவர்களுடைய வாழ்வில் நல்ல மாற்றம் பெறுவதற்கும், முன்னேற்றம் அடையவும் எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு முன்னேற்றம் என்பது ஏற்பட்டால்தான் அவர்களுடைய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக திகழும். அதற்கு மாறாக முன்னேற்றம் என்பதே இல்லாமல் கிணத்தில் போட்ட கல்லு போல இருந்தால் அந்த வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தமே இல்லை. வாழ்க்கை வளமாக நட்சத்திரங்களை பொருத்து வழிபாடு மேற்கொள்ளும் முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

மகம், மூலம், அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் பித்ரு தேவர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் விரதம் இருந்து காக்கைக்கு உணவளித்து பிறகு ஏதாவது ஒரு காவி உடை கட்டிய சாமியாருக்கும் உணவளிக்க வேண்டும். பிறகு உணவருந்தி வந்தால் அவர்களுடைய முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

பரணி, பூரம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை அம்மனுக்கு முக்கனிகளை வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பௌர்ணமி நாளன்று சத்திய நாராயண பூஜையை மேற்கொள்ள வேண்டும். வீட்டிலேயே கலசம், நெய்வேத்தியம் போன்றவற்றை செய்து வழிபட அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல செல்வாக்கும், செல்வமும் உயரும்.

- Advertisement -

அஸ்வினி, அஸ்தம், திருவோண நட்சத்திரக்காரர்கள் அமாவாசை நாளன்று சக்தி வழிபாடை மேற்கொள்ள வேண்டும். மாலையில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் அம்மனுக்கு மூன்று நெய் விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளில் பைரவரை வழிபட வேண்டும். பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபட்டு வர அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய கர்ம வினைகள் தீருவதற்கு ஜீவ சமாதி இருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபாட வேண்டும். தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளன்று யாரிடமும் ஒரு சிறிய குண்டுமணி கூட தானம் பெறக் கூடாது. அதற்கு மாறாக பிறருக்கு அவர்களால் இயன்ற அளவு தானத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திர நாளன்று தாய் வழியில் இருக்கக்கூடிய குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருள் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்கும்.

இந்த எளிமையான வழிபாட்டை தொடர்ந்து தங்களுடைய வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டு வந்தால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்காக இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும் என்பதோடு அனைத்து விட நன்மைகளும் பெற்று வாழ்க்கை அர்த்தமுள்ளதாக திகழும்.

- Advertisement -