முன்னோர்கள் சாபம் விலக அமாவாசை பரிகாரம்

amavasai2
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நிறைய குடும்பங்கள் கஷ்டப்படுவதற்கு காரணமாக இருப்பது இந்த முன்னோர்களின் சாபம். யார் ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பித்தாலும், உங்களுடைய குடும்பத்திற்கு முன்னோர் தோஷம் இருக்கிறது, முன்னோர்களின் சாபம் இருக்கிறது, நல்லது நடக்காமல் இருப்பதற்கும் குடும்பம் கஷ்டப்படுவதற்கும், இதுதான் காரணம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

உங்களுடைய குடும்பத்திற்கு இப்படி முன்னோர்களின் சாபம் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். முன்னோர்களின் சாபம் இல்லை. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற வேண்டும் குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -

பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சின்ன விஷயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நாளை முழு சூரிய கிரகணம் நடைபெற இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது நம்முடைய இந்தியாவில் தென்படவில்லை எனும் காரணத்தால், நாளைய தினம் எல்லோரும் வழக்கம்போல வீட்டில் அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும். முன்னோர்கள் வழிபாட்டை தவறவிடக்கூடாது.

நாளைய தினம் அமாவாசை திதியில் பெண்கள் காலையில் எழுந்து வீட்டு வாசலை கூட்டி தண்ணீர் மட்டும் தெளித்து விடுங்கள். வாசலில் கோலம் போடக்கூடாது. நாளைய தினம் அமாவாசை என்பதால் நிறைய பேர் வீடுகளில் இதை கடைபிடிப்பார்கள். சில பேர் வெள்ளை நிறத்தில் பளிச்சென கோலம் போடாமல், வெறும் செம்மண்ணில் சிறியதாக ஒரு கோலம் போட்டுக் கொள்வார்கள். உங்கள் வீட்டு வழக்கப்படி அதை நீங்கள் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முன்னோர்கள் சாபம் விலக அமாவாசை பரிகாரம்

வாசல் கூட்டி முடித்த பிறகு, ஒரு எச்சில் படாத டம்ளரில் சுத்தமான தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு துளசி இலைகளை போட்டு உங்கள் நிலைவாசல் படியில் வைக்க வேண்டும். அந்த டம்ளருக்கு பக்கத்தில் சின்னதாக ஒரு தட்டில் நாட்டு சர்க்கரை, வெல்லம், பணங்கற்கண்டு இப்படி ஏதாவது இனிப்பு சுவை நிறைந்த பொருளை கொஞ்சம் வைத்து விடுங்கள்.

இப்படி இந்த இரண்டு பொருளையும் நிலை வாசலில் வைக்கும் போது, இது எங்கள் வீட்டு முன்னோர்களுக்காக வைக்கக்கூடியது. முன்னோர்களின் மன சாந்தி அடைய வேண்டும், இன்று அமாவாசை திதி என்பதால் எங்கள் வீட்டு முன்னோர்களை வரவேற்பதற்காக, எங்கள் முன்னோர்களது வழிபாட்டை நிறைவு செய்வதற்காக இந்த பொருளை வைக்கின்றோம் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

நாளை அமாவாசை திதி என்பதால் உங்கள் வீட்டு முன்னோர்கள், நீங்கள் போடும் படையளை சாப்பிடுவதற்காக உங்கள் வீட்டிற்கு வருவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி உங்கள் வீட்டிற்குள் நுழையும் முன்னோர்கள் அவர்களுக்காக வைக்கப்பட்ட இந்த தண்ணீரையும் இனிப்பு பொருளையும் பார்க்கும்போது மனம் குளிர்ந்து விடுவார்கள்.

அவர்களை நீங்கள் மறக்கவில்லை என்பதை, நிலை வாசலுக்குள் நுழையும் போதே கண்டுபிடித்து விடுவார்கள். இதை பார்த்த முன்னோர்களின் மனசுக்குளிர்ந்து உங்களுடைய குடும்பத்திற்கு ஆசீர்வாதம் கிடைத்துவிடும். பித்ரு தோஷம், முன்னோர்கள் தோஷம் உள்ளவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

சில வீடுகளில் பெண்களால் அமாவாசை படையலை போட முடியாது. காலையில் அவசர அவசரமாக எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அமாவாசை படையல் போட முடியவில்லை என்றாலும், அமாவாசை படையல் போட்டு முன்னோர்கள் வழிபாடு செய்த புண்ணியத்தை இது உங்களுக்கு கொடுத்து விடும்.

திங்கட்கிழமை காலையில் இந்த இரண்டு பொருளை நிலை வாசல் படியில் வைப்பீர்கள். செவ்வாய்க்கிழமை காலை இந்த தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். அந்த சர்க்கரையை நிலை வாசல் படிக்கு வெளியில் தூவி விடுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் ரோட்டு பக்கத்தில் இருக்கும் உங்க கேட்டில் வைக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அமாவாசை பரிகாரம்

வீட்டு நிலை வாசல் கதவு இருக்கும் அல்லவா. அதாவது வீட்டிற்குள் நுழையக்கூடிய கதவு பக்கத்தில் இந்த இரண்டு பொருளை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கதவைத் திறந்த உடன் உங்க வீட்டு வரவேற்புரை வரும் அந்த இடத்தில் இந்த இரண்டு பொருளை வையுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -