- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன்னோர்களின் தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ

முன்னோர்களின் தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை எந்த அளவிற்கு சிறப்போ அதைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் தை அமாவாசை. தை அமாவாசை அன்று முன்னோர்களின் வழிபாட்டை கண்டிப்பான முறையில் நாம் செய்ய வேண்டும். முன்னோர்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும், அவர்கள் செய்த பாவங்கள் விலகவும், அவர்கள் செய்த பாவங்களால் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் விலகவும் தை அமாவாசை அன்று கண்டிப்பான முறையில் முன்னோர்களை வழிபாடு செய்து நம்மால் இயன்ற தான தர்மங்களை நாம் செய்ய வேண்டும். அதோடு செல்வ செழிப்பையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு சூழ்ச்சமமான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்புடன் வாழ

முன்னோர்களின் ஆசிர்வாதமும், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைத்தால் தான் ஒருவருடைய வாழ்க்கையில் அவர் சிறப்பாக வாழ முடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படி முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு அமாவாசை நாள் என்பது மிகவும் உகந்த நாள், அதே போல் தான் குலதெய்வ அருளை பெறுவதற்கும் அமாவாசை மிகவும் உகந்த நாள். அதிலும் குறிப்பாக விசேஷமான தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகவே திகழ்கிறது. இவர்கள் ஆசிர்வாதத்தை பெற்றாலே செல்வ செழிப்புடன் நம்மால் வாழ முடியும். அப்படி இவர்கள் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை திதி தொடங்கிய உடனே செய்து விட வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது ஜனவரி மாதம் 28ஆம் தேதி இரவு 8:10 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. இரவு 8:10ல் இருந்து காலையில் 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முழு அமாவாசை என்பது புதன்கிழமை வருகிறது. புதன்கிழமை என்பது விநாயகருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் இது புதன் பகவானுக்கும் உகந்த நாள் என்பதாலும் அன்றைய தினம் திருவோண நட்சத்திரம் வருகிறது என்பதால் அது பெருமாளுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இப்படி பெருமாள், புதன் பகவான், விநாயகப் பெருமான் என்று இவர்களின் அருளையும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பெற முடியும்.

இதற்கு பச்சை நிற துணி வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சைப்பயிரை வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியையும், ஒரு ஸ்பூன் அளவிற்கு கருப்பு எள்ளையும் வைத்துக் கொள்ளுங்கள். இதை மூட்டையாக கட்டி உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு நிலை வாசலுக்கு வெளியே வலது புறம் மூலையில் கட்டி விட வேண்டும். ஏழு நாட்கள் இது அப்படியே இருக்கட்டும். ஏழு நாட்களும் காலையிலும், மாலையிலும் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை காட்டி வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஏழு நாட்கள் கழித்து எட்டாவது நாள் இதை எடுத்து ஓடுகின்ற நீரிலோ கால்படாத இடத்திலோ போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும், சாபமாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகும். அவை விலகிய பிறகு என்ன செல்வ செழிப்புடன் வாழ முடியும் அல்லவா?

இதையும் படிக்கலாமே:துரதிர்ஷ்டம் தரும் மச்சம்
சூட்சுமமான பரிகாரங்களை செய்யும் பொழுது முழு மனதுடன் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு செய்தால் கண்டிப்பான முறையில் அந்த பரிகாரம் வெற்றியடையும். அந்த வகையில் தை அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்து தோஷங்களையும், சாபங்களையும் நீக்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்