சகல செல்வமும் பெற முருகர் வழிபாடு

murugan pray
- Advertisement -

இந்த கலியுகத்தில் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் பாலிக்கக் கூடிய அற்புதமான கடவுளாக இருக்கக் கூடியவர் தான் இந்த கந்த பெருமான். கந்தனை வழிபட பல வழிபாட்டு முறைகள் இருக்கிறது. ஆனால் அந்த பெருமாளை அடைய ஒரு சில வழிகளை உள்ளது. அது என்னவென்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சகல செல்வத்தையும் பெரும் முருகன் வழிபாடு

முருகர் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அருணகிரிநாதர் தான். அருணகிரிநாதர் என்றால் அவர் பாடிய திருப்புகழ் தான். இந்த திருப்புக ழை முருகப்பெருமானே அருணகிரிநாதரிடம் சொல்லி எழுத பெற்றதாக சொல்லப்படுகிறது. அப்படியான திருப்புகழ் தான் நாம் கந்தனை அடைய எளிமையான ஒரு வழி அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பெரும்பாலும் இறைவனிடம் நாம் வேண்டுதல் என்று நிற்கும் பொழுது அனைவரும் தனக்கு தேவையானவை என்று ஒரு பெரிய பட்டியலே சுமந்து கொண்டு நிற்கிறார்கள். இறைவனை வணங்கும் பொழுது இறைவன் நம்முடன் இருக்க வேண்டும் என்று தான் வணங்க வேண்டுமே தவிர இதையெல்லாம் வேண்டும் என்று கேட்பதை தவிர்க்க வேண்டும்.

அதிலும் கந்தனிடம் அருளைப் பெற வேண்டும் எனில் கந்தனை தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று கேட்டால் போதும் என்று சொல்லப்படுகிறது. இறைவன் என்பவர் நம்மை படைத்தவர் அவர்களுக்கு நமக்கு எந்த நேரத்தில் எதை தர வேண்டும் என்பது தெரியும். நாமாக எதையும் கேட்டு அதன் மூலம் வரும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள தேவையில்லாத ஒன்று என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் திருப்புகழில் வரும் இந்த வரி தான் கந்தனை நாம் அடைவதற்கான வழியாக சொல்லப்படுகிறது. கந்தனை அரை நிமிடமாவது மனதார நினைக்க வேண்டும். மனதார நினைப்பது என்றால் உள்ளன்போடு உள்ளம் உருகி அவரை நினைத்து அவர் பால் நம் மனம் ஈர்க்க வேண்டும் அப்படி கண்ணீர் மல்க அவர் முன் நின்று திருப்புவலி இந்த அடிகளை பாடினால் போதும் நமக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் கந்தன் அருளுவார் என்று சொல்லப்படுகிறது.

திருப்புகழ்

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப …… மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க …… பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த …… வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த …… மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் …… முருகோனே.

- Advertisement -

அருணகிரிநாதர் அருளிய இந்த பாடலில் கந்தனை அரை நொடி நினைக்காததால் தான் அடைந்த இன்னல்களையும், அரை நொடி நினைத்ததால் தான் பெற்ற இன்பத்தையும் விவரிக்கிறார். இந்த திருப்புகளின் அடிகளை தினந்தோறும் முருகனை நினைத்து அரை நிமிடமாவது மனம் உருகி சொல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர மந்திரம்

தனக்கு எது வேண்டும் என்று கேட்காமல் திருப்புகழின் இந்த ஒரு அடி போதும் நம் எல்லா வளத்தையும் பெற்று நிம்மதியாக வாழ. இத்தகைய அற்புதமான இந்த வழிபாட்டு முறையை நாமும் பின்பற்றி அருணகிரிநாதர் சொன்ன அந்த பேரினை அனைவரும் பெற வழி தேடி கொள்ளலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -