இன்று ஒரே ஒரு நாள் முருகனை வழிபட்டால் அளவில்லா பலன்களை பெறலாம்

murugan
- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய தினம் என்பது அனைவரும் அறிந்தே. அதிலும் அந்த செவ்வாய்க்கிழமை தினத்தில் மாதந்தோறும் வரும் சஷ்டி விரத தினமோ அல்லது கார்த்திகை விரத தினமோ வருவது அரிதான ஒன்றாகும். அப்படி முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமை, மாத சஷ்டி, கார்த்திகை ஆகிய மூன்று விஷேஷ தினங்களும் ஒரு சேர இருக்கும் நாளாக (12.03.2019) ஆகிய இன்றைய தினம் இருக்கிறது. இந்த சிறப்பான தினத்தில் முருகனின் அருளை பெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Murugan

செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக முருகன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். அதிலும் மூன்று சிறப்பான தினங்கள் ஒன்று சேர்ந்து ஒரே தினத்தில் வருவதால் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அந்த பூஜைகளை கண்டு முருகனின் அருளை பெற ஏராளமானோர் இன்றைய தினம் முருகன் கோயில்களுக்கு செல்வர். எனவே மிக சிறப்பான இன்றைய தினத்தில் காலையில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட மாலையில் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறலாம்.

- Advertisement -

முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

kantha sasti kavasam lyrics

வசதியற்ற ஏழை மக்களுக்கு எலுமிச்சை சாதம் தானம் செய்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள் நீங்கும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செந்நிற மலர்களை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்வது சிறந்தது. இப்படியான முறைகளில் முருகனை இன்றைய தினத்தில் வழிபடுபவர்களுக்கு காரியங்களில் ஏற்படும் தடை தாமதங்கள் நீங்கும். செவ்வாய் கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். நீதிமன்ற வழக்குகள், பூர்வீக நிலம், சொத்து சம்பந்தமான விடயங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். திருமணம், புத்திர பாக்கியம் போன்றவை உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதியில் இவரை வழிபாட்டில் என்ன பலன் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Murugan valipadu in Tamil. It is also called as Murugan sashti in Tamil or Kiruthigai dhinam in Tamil or Muruga peruman in Tamil or Masi sevvai in Tamil.

- Advertisement -