வீட்டிலேயே தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி?

rasagulla

ரசகுல்லா அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகை ஆகும். அனைத்து விசேஷங்களில் இந்த இனிப்பு கண்டிப்பாக இடம்பெறும் . இதனை வீட்டிலே சுலபமாக செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ragulla_1

ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்
சக்கரை – 1 கப்
எலுமிச்சம் பழச்சாறு – 1

ரசகுல்லா செய்முறை:

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும். நன்றாக கொதிக்கும் போது அதில் எலுமிச்சை சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவேண்டும். அவ்வாறு எலுமிச்சை சாறை சேர்க்கும்போது பால் திரிய ஆரம்பிக்கும். பாலினை அவ்வப்போது கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

ragulla_2

- Advertisement -

முழுவதுமாக திரிந்த பாலை ஒரு பவுலின் மீது துணி போட்டு அதில் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய உடன் அந்த துணியில் இருக்கும் திரிந்த பாலை நன்றாக அழுத்தி ஈரப்பதம் இல்லாமல் உலர்த்திக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சக்கரை போடு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அவ்வாறு செய்தால் சக்கரை பாகு தயாராகிவிடும். பிறகு உலர்த்திய பாலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் சக்கரை பாகில் போடவேண்டும். அதனை 20 நிமிடங்கள் வரை மூடி வைத்தால் சுவையான ரசகுல்லா தயார்.

rasagulla_3

குறிப்பு: தயாரான ரசகுல்லாவை 5 மணி நீரம் கழித்தே சாப்பிட வேண்டும். அப்போதுதான் ரசகுல்லா முழுமையான சுவையுடன் இருக்கும் .

rasagulla_4

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம்

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Rasagulla recipe in Tamil. It is also called as Rasagulla seimurai in Tamil or Rasagulla seivathu eppadi in Tamil or Rasagulla preparation in Tamil.