ரொம்ப ரொம்ப ஈஸியா முடியை வளர்க்க முருங்கைக்காய் ஹேர் ஸ்பிரே ரெமிடி!

hair12
- Advertisement -

இது கொஞ்சம் வித்தியாசமான அழகு குறிப்பு தான். ஆனால் ஹேர் பேக் போட்டு தலையை கசக்கி கஷ்டப்படுவதை விட, மிக மிக எளிமையான முறையில் இந்த மாதிரி ஹேர் சீரம் நம் வீட்டிலேயே நம் கையாலேயே தயார் செய்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் எளிமையான முறையில் முடியை வளர்த்து விடலாம். ஹார்பேக் போடலாம் தவறு கிடையாது. ஆனால் ஹேர் பேக் போட்டு தலையை அலசுவதை விட, இப்படி ஹேர் சீரம் போட்டுக்கொண்டு தலைமுடியை அலசி கொள்வது சுலபமாக இருக்கும். தலைமுடியை கவனித்துக் கொள்ள நேரம் இல்லாதவர்களுக்கு கூட இந்த ஹேர் சிரம், முடி வளர்ச்சிக்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். வாங்க அந்த எளிமையான ஹேர் சீரமை நம் வீட்டிலேயே நம் கையாலேயே எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

முருங்கைக்காய் ஹேர் சிரம்:
முதலில் தலைப்பை படித்த உடனேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஹேர் சீரமுக்கு கட்டாயமாக தேவைப்படக்கூடிய பொருள் முருங்கைக்காய். கொஞ்சம் முத்திய முருங்கை காயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். முருங்கைக்காயை குறுக்கே வெட்டி அதன் உள்ளே இருக்கும் விதைகளையும் சதை பகுதியையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது நமக்கு தேவை. ஒரு கைப்பிடி அளவு அல்லது இரண்டு கைப்பிடி அளவு. உங்கள் தேவைக்கு ஏற்ப இந்த முருங்கைக்காய் விதைகளை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து முருங்கைக்காய் விதைகள் 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு, கருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன், அலோவேரா ஜெல் 2 டேபிள் ஸ்பூன், போட்டுக் கொள்ளவும். இதை தண்ணீர் ஊற்றி அறைக்கலாம், அல்லது அரிசி கலைந்த தண்ணீரை ஊற்றியும் அரைக்கலாம். அது உங்களுடைய விருப்பம். கொஞ்சம் திக்காக இந்த பேஸ்ட்டை அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த பேஸ்ட்டை நாம் வடிகட்ட போகின்றோம். லிக்விட் ஆகத்தான் நமக்கு இந்த சீரம் தேவைப்படுகிறது. அதற்காக ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைக்கக்கூடாது அல்லவா. இதனுடைய சத்துக்கள் வீணாகும். ஆகவே கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த பொருட்கள் எல்லாம் விழுதாக அரைபட்ட பிறகு ஒரு காட்டன் துணியில் இதை ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்தால் இதனுடைய சாறு மட்டும் நமக்கு கிடைத்திருக்கும். அதில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயிலை விட்டு ஒரு கரண்டியால் கலக்கி விட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் நன்றாக இருக்கும்.

- Advertisement -

ஒருநாள் விட்டு ஒரு நாள் இதை தலையில் ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும் முடியை பாகம் பாகங்களாக பிரித்து வேர்க்கால்களில் இந்த சீரம் படும்படி ஸ்பிரே செய்து ஐந்து நிமிடம் ஜென்டிலாக மசாஜ் செய்து விட்டு ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ கழித்து கூட தலைக்கு குளித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை படு வேகமாக நிறுத்தி, ராக்கெட் வேகத்தில் உங்கள் முடியை வளர்த்துக் காட்டலாம். இந்த ஹேர் சீரமை மட்டும் தலையில் அப்ளை செய்து பாருங்கள்.

இந்த ஹேர் சீரமமை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாராளமாக உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்தி வரலாம். இந்த ஹேர் சீரம் உங்களுடைய தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி கூடிய விரைவில் அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும். இதில் ஒரு பொருளை கூட மிஸ் பண்ணாதீங்க. பாதாம் ஆயில் கட்டாயமாக சேர்க்க வேண்டும். அது முடி உறுதியாக வளர்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும் இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -