1 கப் முருங்கைக்கீரை இருந்தா போதும் ஆரோக்கியம் மிகுந்த சுவையான சட்னி 5 நிமிடத்தில் தயார் செய்து விடலாமே!

murungai-keerai-chutney1
- Advertisement -

தினமும் காலையில் எழுந்த உடனேயே என்ன சட்னி செய்வது? என்று தான் இல்லத்தரசிகளுக்கு ஒரே குழப்பமாக இருக்கும். எப்போது பார்த்தாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தவிர வேறு புதுமையாக எந்த சட்னியும் யோசனையில் உதிக்காது. சதா ஒரே சட்னியை அரைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்களுக்கும் அலுப்பு தட்டிவிடும். ஆரோக்கியம் மிகுந்த முருங்கைக்கீரை ஒரு கப் இருந்தால் கூட போதும்! சூப்பரான சுவையான முருங்கைக்கீரை சட்னியை ஐந்தே நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம். அது எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Murungai keerai

‘முருங்கைக் கீரை சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 6
உடைத்த கடலை – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
முருங்கைக்கீரை – ஒரு கப்

- Advertisement -

எண்ணெய் – தேவையான அளவு இருக்கு
தேங்காய் – இரண்டு பத்தை
புளி – நெல்லி அளவு
உப்பு – தேவையான அளவிற்கு
கடுகு – கால் டீஸ்பூன்

Murungai keerai

‘முருங்கைக் கீரை சட்னி’ செய்முறை விளக்கம்:
முருங்கைக் கீரையில் இருக்கும் இரும்பு சத்து மனிதனை மேலும் வலுவாக்குகிறது. தினமும் முருங்கைக் கீரையை கொஞ்சமாக ஏதாவது ஒரு முறையில் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் பலம் பெறும். முருங்கைக் கீரை சூப், முருங்கைக் கீரை பொரியல், முருங்கைக் கீரை சாம்பார், கூட்டு என்று செய்யும் வரிசையில் இந்த முருங்கைக்கீரை சட்னிக்கு தனி மவுசு தான். புதுமையான முறையில் சுவையான சட்னி செய்து கொடுத்தால் யாருக்கு தான் பிடிக்காது!

- Advertisement -

ஒரு கப் முருங்கைக் கீரையை நன்கு தண்ணீரில் அலசி தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் வர மிளகாய்களை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணெயில் பொட்டுக்கடலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை தனியாக எடுத்து ஆற வைத்து விட்டு அதே எண்ணெயில் முருங்கைக் கீரையைப் போட்டு கொஞ்சமாக வதக்கி எடுங்கள். பின்னர் தேங்காய் பத்தைகளை சில்லு சில்லாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

murungai-keerai-chutney

அதன் பிறகு வறுத்து வைத்துள்ள மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, பொட்டுகடலை மற்றும் முருங்கை கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சமாக சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். புளி சேர்க்க விரும்பாதவர்கள் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளலாம். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக சட்னியை அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக ஐந்தே நிமிடத்தில் ஆரோக்கியம் மிகுந்த சுவையான முருங்கைக் கீரை சட்னி தயார் செய்து விடலாம். நீங்களும் ஒரு முறை இம்முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -