இந்த சூப் மட்டும் அடிக்கடி குடித்து பாருங்க உங்களுடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை உடனே உயரும்! சோர்வு என்பதே வராது எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

murungai-keerai-soup-recipe
- Advertisement -

அடிக்கடி உடலில் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்து காணப்படுபவர்களுக்கு ரத்த சோகை இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் இயல்பாகவே உடலில் ஏற்படுகிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது, உடல் சோர்வு, மந்தமான நிலை மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் நமக்கு ஏற்படுகிறது. இதில் இருந்து எளிதாக மீண்டு வருவதற்கு அடிக்கடி இந்த ஒரு சூப்பை நீங்கள் குடித்து வந்தாலே போதும்! அது என்ன சூப்? எப்படி தயாரிக்கப் போகிறோம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்:
தனியா விதைகள் – மூன்று ஸ்பூன், சீரகம் – இரண்டு ஸ்பூன், மிளகு – இரண்டு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பூண்டு – பத்து பற்கள், முருங்கை இலைகள் – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் – ஆறு, கல் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன்.

- Advertisement -

முருங்கைக்கீரை சூப் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு முருங்கை இலைகளை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு தனியா விதைகளை சேர்த்து அதனுடன் சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து கொள்ள வேண்டும். பின் இவற்றுடன் 10 பல் பூண்டு தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டுக் கொள்ளுங்கள். பின் லேசாக வாசம் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் ஆறியதும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் போல தண்ணீர் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஆறு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடுங்கள். அதில் நீங்கள் அலசி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதித்து வரும் பொழுதே கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் மற்றும் ஆறு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறர் இதனுடன் தேவையான அளவுக்கு உப்பு போட்டு நீங்கள் அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். ஐந்திலிருந்து ஆறு நிமிடம் வரை நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து அதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் இலை சக்கைகளை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதையும் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்தால் சாறு இறங்கும். இப்போது நமக்கு தேவையான முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் தயார்! இதை இப்போது தாளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இனி நீங்க ப்ரைட் ரைஸ் சாப்பிடணும்னா ஹோட்டல் போய் வெயிட் பண்ற நேரத்தை விட சீக்கிரமாக, வீட்டில் அதுவும் நல்ல டேஸ்ட்டாவே செஞ்சுடலாம். இந்த முறையை ட்ரை பண்ணுங்க. செம ஈஸியான மஷ்ரூம் ப்ரைட் ரைஸ் ரெசிபி.

இதற்காக அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் நீங்கள் எடுத்து வைத்துள்ள சூப்பை அதில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து அடங்கியதும் சூடு பொறுக்கும் அளவிற்கு ஆறவிட்டு பரிமாற வேண்டியதுதான்! ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த முருங்கைக்கீரை சூப் ரெசிபி ஆரோக்கியம் நிறைந்தது. இதை வாரம் இருமுறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு முறை குடித்து வாருங்கள், உங்களுடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.

- Advertisement -