இது தெரிந்தால் இனி முருங்கைக்கீரையை உருவிவிட்டு அதன் தண்டுகளை குப்பையில் தூக்கி போடவே மாட்டீங்க. உடல் ஆரோக்கியத்திற்கு இது அவ்வளவு அவசியம்.

soup
- Advertisement -

முருங்கைக் கீரையில் எவ்வளவு இரும்புச்சத்து உள்ளது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இருப்பினும் அந்த முருங்கைக்கீரையில் இருக்கும் தண்டுகளில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. ஆனால் கீரையை மட்டும் உருவி எடுத்துக்கொண்டு, பெரும்பாலும் அந்த தண்டுகளை நாம் குப்பையில் தூக்கி தான் போடுவோம். ஆனால் முருங்கைக்கீரை தண்டுகளை இனி குப்பையில் தூக்கி போட மாட்டீங்க. இந்த சூப்பர் ரெசிபியை தெரிஞ்சுகிட்டா. அருமையான சூப்பரான ஒரு சூப் ரெசிபி தான் இன்னைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சூப்பை விரும்பி குடிப்பார்கள். அவ்வளவு அவ்வளவு சத்து நிறைந்த, சுவை நிறைந்த சூப் ரெசிபி உங்களுக்காக.

முதலில் முருங்கைக்கீரை தண்டுகளை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒரு மீடியம் சைஸ் முருங்கைக்கீரை கட்டிலிருந்து தடிமனான காம்புகளை நீக்கி விட்டு, இளசான காம்புகளை மட்டும் எடுத்துக் கொண்டால், பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியானதாக இருக்கும். இதோடு நமக்கு ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையும் தேவைப்படும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் – 8 பல், சீரகம் – 3/4 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், பழுத்த தக்காளி பழம் – 1, இஞ்சி துண்டு – 1/2 இஞ்ச், தோல் உரித்த பூண்டு பல் – 2, இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல இதை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் அகலமான ஒரு கடாயை வைத்து, அதில் தயாராக எடுத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை தண்டுகள், ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை போட்டு, 5 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை, தண்டுகள் மூழ்கும் வரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதையும் இந்த கடாயில் ஊற்றி விடுங்கள்‌. 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடியைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுப்பை பற்றவைத்து முழு தீயில் வைத்து தண்ணீரை தளதளவென கொதிக்க வையுங்கள். பத்து நிமிடங்கள் நன்றாக தண்டுகள் தண்ணீரில் கொதிக்க வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் நன்றாக சுண்டி நிறம் மாறி வந்தவுடன் தேவையான அளவு உப்பு போட்டு, மீண்டும் இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவு தான். சுடச்சுட சூப்பரான சூப் தயார். இதை அப்படியே வடிகட்டி தேவைப்பட்டால் மேலே மிளகுத்தூள் தூவி குடித்து பாருங்கள்‌. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதேசமயம் அத்தனை சத்துக்கள் நிறைந்தது இந்த சூப்.

இது மற்ற சூப் போல கொழகொழவென திக்காக எல்லாம் இருக்காது. தண்ணீர் போல தான் இருக்கும். ஆனால் முருங்கைக்கீரை தண்டின் சத்துக்கள் அனைத்தும் இந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாள் இந்த சூப்பை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். முடி உதிர்வு குறையும். கைகால் மூட்டு வலியில் நல்ல வித்தியாசம் தெரியும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவர்கள் ஆக இருந்தால் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -