‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கேற்ப நீங்கள் விதைக்கும் விதை நல்லபடியாக முளைக்க இந்த 1 இலைச்சாற்றை தெளித்தால் போதுமே!

murungai-seed-planting
- Advertisement -

ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு அன்று தேடித்தேடி விதைகளை வாங்கி விதைப்பது நம் முன்னோர்களுடைய பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. ஆடிப்பட்டத்தில் விதைக்கும் நெல், புரட்டாசி மாதத்தில் இருக்கும் சீதோசன நிலைக்கு சரியாக இருப்பதால் எந்த விதமான நோய் தாக்குதலும் இன்றி, இலை சுருட்டல் நோய் போன்ற பிரச்சனைகளும் இன்றி அதிக மகசூல் பெறுவார்கள். இதே முறையில் நம் வீடுகளிலும் சிறிய தொட்டிகளில் விதைகளை ஆடி மாதத்தில் போடும் பொழுது விளைச்சல் அமோகமாக இருக்கும்.

seeds-plant

மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள், வீடுகளில் பல காய்கறி செடிகள், பூச்செடிகள், கீரைகள் ஆகியவற்றை வளர்ப்பவர்களும் புதிதாக விதைகளை வாங்கி ஆடி மாதத்தில் நடவு செய்யலாம். அப்படி செய்யும் பொழுது சிலசமயங்களில் விதைக்கும் விதையானது முளைப்பதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். விதைகளுக்கு எந்த விதமான தொந்தரவும் இன்றி சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விரைவாக வளர இந்த ஒரு இலைச்சாற்றை தெளித்தால் போதும். அது என்ன இலை? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

- Advertisement -

பொதுவாக விதைகள் விதைக்கப்படும் பொழுது அதையும் சாப்பிடுவதற்கு என்று எறும்புகள் அலைந்து கொண்டிருக்கும். இதனால் விதைகள் முளைப்பு விடுவதில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் நீங்கவும், விதைகளுக்கு விரைவாக முளைக்கச் செய்ய தூண்டல்கள் ஏற்படவும் தேவையான சத்துக்களைக் கொடுக்க வேண்டும். அப்படியான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த கீரை மனிதர்களுக்கு மட்டும் இல்லை, செடிகளுக்கும் நல்ல ஊட்டச்சத்து இருக்கின்றது என்பதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Murungai keerai

வைட்டமின்கள், பொட்டாசியம், ஐயர்ன் என்று தன்னுள்ளே நிறைய சத்துகளை அடக்கியுள்ள ‘முருங்கைக்கீரை’ தான் அது. முருங்கை இலை சாற்றை விதைகளுக்கு தெளித்து விடுவதன் மூலம் விரைவாக எந்தவிதமான தொந்தரவும் இன்றி முளைக்கத் துவங்கும். இதில் இருக்கும் சத்துக்கள் விதைகளுக்கு கிடைத்து விதைகள் அதிக ஊட்டசத்துள்ள நல்ல தரமான செடிகள் முளைக்கும்.

- Advertisement -

குறிப்பாக காய்கறி செடிகள், கீரை வகைகளுக்கு இதை செய்வது மிகவும் நல்லது. தேவையான அளவிற்கு முருங்கைக் கீரையை உருவி ஒரு முறை தண்ணீரில் அலசி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது ஜெல்லி போன்ற சத்து மிகுந்த சாறு நமக்கு கிடைக்கும். ஒரு மடங்கு இந்த சாற்றுடன் 10 மடங்கு தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு ஊட்டச்சத்து டானிக் செடிகளுக்கு கொடுத்தாலும், அதனை நேரடியாக கொடுக்கக்கூடாது. அதனுடன் 10 மடங்கு அளவு தண்ணீர் சேர்த்து கொடுப்பது நலம் தரும்.

murungai-ilai-saaru

முருங்கை இலை சாற்றில் அதிக அளவில் விட்டமின் ஈ, விட்டமின் சி, பொட்டாஷியம், கால்ஷியம், ஐயர்ன், வைட்டமின் c, புரோட்டீன் ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன. எனவே இவைகள் செடிகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாகவும், எறும்புகள், பூச்சிகள் தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்கவும் செய்யும் சிறப்பானதொரு லிக்விட் வளர்ச்சி ஊக்கியாக இருக்கும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து வர விதைகள் நன்கு முளைக்க ஆரம்பிக்கும். முளைத்த விதைகள் வேகமாக துளிர்விட ஆரம்பிக்கும். கீரைகளுக்கு தெளிக்கும் பொழுது சத்து மிகுந்த கீரை வகைகளும் உருவாகும்.

- Advertisement -