ராகுவின் சாரம் பெற்ற இந்த ஒரு மரத்தை தெரியாமல் கூட இந்த இடத்தில் வீட்டில் வளர்க்க வேண்டாம்!

rahu-rahu-murungai
- Advertisement -

வீட்டில் வளர்க்கக்கூடிய மரங்கள் ஏராளம் நம்மிடம் உண்டு. இந்த மரங்களுக்கு கூட நல்லவிதமான அதிர்வலைகளையும், சில மரங்கள் கெட்ட விதமான அதிர்வலைகளையும் உண்டாக்கக்கூடிய தன்மை கொண்டுள்ளது. எல்லா விதமான மரங்களையும், எல்லா இடங்களிலும், எல்லா திசைகளிலும் வைத்து வளர்க்க முடியாது. இதனால் பிரச்சனைகள் வருவதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அந்த வகையில் இந்த ஒரு மரத்தை இந்த இடத்தில் வளர்க்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படியான மரம் என்ன? எதனால் அவ்வாறு கூறுகின்றனர்? என்பது போன்ற வாஸ்து சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருடைய வீட்டிலும் பெரும்பாலும் அதிகம் வளர்க்கக்கூடிய மரங்களில் இதுவும் ஒன்று. இந்த மரத்தை பொதுவாக வீட்டின் முன்புறம் வளர்ப்பது நல்லதல்ல என்று கூறுவார்கள். நம் வீட்டில் அவ்வாறு கூறப்படும் ஒரு மரம் முருங்கை மரம் ஆகும். முருங்கை மரம் வலு இல்லாத கிளைகளை கொண்டுள்ளது. இது எப்பொழுது வேண்டுமானாலும் முறியும் தன்மையை கொண்டுள்ளதால் வீட்டின் முன்புறம் வளர்க்கக்கூடாது, பின்புறம் வைத்து வளர்க்கலாம் என்று கூறப்பட்டது.

- Advertisement -

வீட்டின் முன்புறம் விளையாடும் குழந்தைகளின் மீது கிளைகள் ஒடிந்து விழாமல் இருக்கவும், அதிலிருந்து வரக்கூடிய கம்பளி பூச்சிகள் தொந்தரவு பாதிக்காமல் இருக்கவும் அவ்வாறு கூறப்பட்டது. அது மட்டும் அல்லாமல் கிராம புறங்களில் எல்லாம், முருங்கை மரத்தை ‘முண்டச்சி’ மரம் என்று தான் கூறுவார்கள்.

இம்மரம் ராகுவின் சாராம்சம் பெற்றுள்ள ஒரு மரமாக இருப்பதால் வீட்டின் முன்னால் வைத்து வளர்ப்பது அசுப சகுனங்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. முருங்கை மரம் மட்டும் அல்லாது, முருங்கை மரத்தில் அதிகம் காணப்படும் கம்பளி பூச்சியும் ராகுவின் சாராம்சம் கொண்டது ஆகும். எனவே இந்த மரத்தை வீட்டில் முன்புறம் வைத்து வளர்த்தால் ஜோதிட ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் நன்மைகளை தராது.

- Advertisement -

மேலும் முருங்கை மரத்தை வீட்டிற்கு வெளிப்புறம் சாலை ஓரத்தில் கூட வைத்து வளர்க்கலாம். மொட்டை மாடியில் சிலர் வளர்ப்பது உண்டு, இதுவும் நல்ல விஷயம் தான். வீட்டின் பின்புறம் இடம் இருந்தால் அங்கேயும் வைத்து வளர்க்கலாம். இதனை விடுத்து வீட்டின் முன்புறம் இருக்கும் இடங்களில் வைத்து வளர்ப்பது நல்ல சகுனங்களை கொடுக்காது.

மேலும் முருங்கை மரத்தை வளர்ப்பவர்களை பார்த்ததுண்டா? மற்ற ஒரு முருங்கை மரத்திலிருந்து உடைத்து வந்த கிளையை தான் நட்டு வைத்து வளர்ப்பார்கள். யாரும் விதை போட்டு வளர்ப்பதில்லை! முருங்கை மரத்தை விதை போட்டு வளர்த்தால் அந்த வீடு உருப்படாது என்று கூறுவார்கள். அதனால்தான் யாரும் விதைகளை போட்டு வளர்ப்பது கிடையாது. தெரியாமல் கூட இதன் விதைகளை போட்டு நீங்கள் வளர்க்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டு பீரோவில் எப்போதும் செல்வம் வற்றாமல் இருந்துகொண்டே இருக்க வேண்டுமா? குபேரன் அருளால் செல்வ சேர்க்கை பெற இந்த வாஸ்து குறிப்புகளை எல்லாம் சரியாக பின்பற்றி வந்தாலே போதும்.

மற்றபடி முருங்கை மரத்தை வளர்ப்பது அதீதமான பலன்களை கொடுக்கக் கூடியது ஆகும். இதில் இருக்கக்கூடிய இலைகளில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானது. அதிகப்படியான இரும்புச்சத்தை கொண்டுள்ள முருங்கை இலையை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது பெண்கள், குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. முருங்கை இலையை காம்புடன் சேர்த்து சூப் வைத்தும் குடிக்கலாம். இப்படி ஏராளமான நன்மைகளை கொண்டுள்ள இந்த முருங்கை மரத்தை முறையாக வளர்த்து அனைவரும் பலன் பெறலாமே!

- Advertisement -