- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மஸ்ரூம் ஃபிரை ரைஸ் செய்வது எவ்வளவு ஈஸி பாருங்க. இவ்வளவு ஈசியா, இவ்வளவு...

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மஸ்ரூம் ஃபிரை ரைஸ் செய்வது எவ்வளவு ஈஸி பாருங்க. இவ்வளவு ஈசியா, இவ்வளவு சுவையா, உங்கள விட சூப்பரா யாராலும் இந்த ரைஸ் செய்யவே முடியாது.

- Advertisement -

ஃப்ரை ரைஸ் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது ரெஸ்டாரண்ட் தான். நம் கையால் பார்த்து பார்த்து இந்த ஃப்ரைட் ரைஸை செய்தாலும் பக்குவமாக சுவையாக வராது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படிப்பட்ட வெரைட்டி ரைஸை கடைக்கு சென்று தான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு ரெசிபியை நிச்சயமாக கடையில் கிடைக்கக்கூடிய அதே சுவையில் நம் வீட்டிலும் செய்ய முடியும். சூப்பர் மஸ்ரூம் ரைஸ் ரெசிபி உங்களுக்காக மட்டும்.

முதலில் 200 கிராம் அளவு வடித்த சாதம் நமக்கு தேவை. உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 200 கிராம் அளவு மஸ்ரூமை சுத்தம் செய்து, வெட்டி இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளவேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தோலுரித்து துருவிய பூண்டு பல் – 5, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, இந்த இரண்டு பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக வதக்கி விட வேண்டும். அதன் பின்பு மிக சிறிய அளவில் இருக்கும் பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 1, ரொம்ப பெரிய வெங்காயம் இருந்தால் பாதி வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து, எண்ணெயிலேயே வதங்கி வெந்து வரவேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 2 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு தூவி, இந்த எல்லா பொருட்களையும் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெயிலேயே வதக்கி விட்டால் அடுப்பை சிம்மில் வைத்து விட்டால், காய் பக்குவமாக வெந்துவிடும். அதன் பின்பு சோயா சாஸ் – 1 ஸ்பூன், ரெட் சில்லி சாஸ் – 1 ஸ்பூன், மிளகு தூள் – 1 ஸ்பூன், சேர்த்து மீண்டும் 1 நிமிடம் போல எல்லாப் பொருட்களையும் வதக்கி விட்டு, வேக வைத்திருக்கும் சாதத்தை கடாயில் உள்ள மசாலா பொருட்களோடு கொட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை போட்டு, தேவைப்பட்டால் சாதத்திற்கு இந்த இடத்தில் உப்புத் தூளைத் தூவி, சாதத்தை உதிரியாக கரண்டியால் அப்படியே கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதை குழந்தைகளுக்கு பரிமாறுங்கள். இது கடையில் வாங்கியதா? இல்லை வீட்டில் செய்ததா? என்ற சந்தேகம் நிச்சயம் அவர்களுக்கு வரும். அந்த அளவிற்கு சுவை இந்த மஸ்ரூம் பிரை ரைஸ்க்கு நிச்சயம் கிடைக்கும். ஆனால் சோயா சாஸ், சில்லி சாஸ் கட்டாயமாக சேர்க்க வேண்டும். அப்போதுதான் ரெஸ்டாரன்ட் சுவை நம் வீட்டிலும் கிடைக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்