அசைவம் சாப்பிட முடியவில்லையே என்ற கவலை வேண்டாம். மஷ்ரூம் மசாலாவை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். அசைவம் சாப்பிடுவதை விட, இதன் சுவை கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும்.

mushroom-fry
- Advertisement -

புரட்டாசி மாதம் அசைவ சாப்பாட்டின் நினைப்பே வரக்கூடாது. அசைவ சாப்பாட்டில் வாசமும் வீட்டில் வீசக்கூடாது. இருந்தாலும் என்ன செய்வது. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆண்கள் இவர்களுக்கு அசைவம்தானே அதிகமாக பிடிக்கின்றது. நாவை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்க வீட்ல அசைவ சாப்பாட்டுக்கு பதிலாக, இந்த ரெசிபியை ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா சூப்பராக இருக்கும். சூப்பரான உருளைக்கிழங்கு மஸ்ரூம் ஃப்ரை எப்படி செய்வது.

mushroom1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பட்டை – 2 துண்டு, லவங்கம் – 2 துண்டு, ஏலக்காய் – 2, வரமிளகாய் – 3, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல இதை அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இந்த மசாலாவுக்கு – 200 கிராம் அளவு உருளைக்கிழங்கு, மஸ்ரூம் – 200 கிராம் அளவு நமக்கு தேவைப்படும். முதலில் மஷ்ரூமை நான்கு துண்டுகளாக வெட்டி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக உருளைக்கிழங்கை முக்கால் பாகம் வேக வைத்து தோல் உரித்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்தால் போதும்.

potato-urulai

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முக்கால் பாகம் வெந்த உருளைக்கிழங்கை இந்த எண்ணெயில் போட்டு நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு எக்காரணத்தைக் கொண்டும் உடைந்து விடக்கூடாது. வறுத்த இந்த உருளைக்கிழங்குகளை எண்ணெயை வடித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அதே எண்ணெயில் மீதமுள்ள எண்ணெயில் மசாலாவை தாளித்து விடலாம். அடுப்பில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொடியாக நறுக்கிய – 2 பெரிய வெங்காயம், கருவேப்பிலை – 1 ஒரு கொத்து, சேர்த்து வெங்காயத்தை சிவக்கும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக மீடியம் சைஸ் – 2 தக்காளி பழங்களை சேர்த்து வதக்கி, உப்பு – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் சேர்த்து, தக்காளியை குழையும் அளவிற்கு வதக்கி விட்டு, அதன் பின்பு வெட்டி வைத்திருக்கும் மஸ்ரூமை கடாயில் சேர்த்து, 3 நிமிடங்கள் வதக்கி, அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் ஊற்றி, மசாலாவை 5 நிமிடங்கள் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். இது திக்காக இருக்க வேண்டும். தண்ணீராக மாறி விடக்கூடாது.

mushroom-fry1

நாம் ஊற்றிய மசாலாவின் பச்சை வாடை முழுமையாக நீங்கிய பின்பு, ஏற்கனவே ஃப்ரை செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்க வேண்டும். மசாலா பொருட்கள் சேர்ந்து வெந்து சுருண்டு ட்ரையாக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தழைகளைத் தூவி பரிமாறினால் சூப்பரான மஷ்ரூம் பொட்டடோ ஃப்ரை தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -