தலைமுடியின் ஆரோக்கியத்தை காக்கும் கடுகு எண்ணெய்

mustard oil
- Advertisement -

தலைமுடி ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. தலைமுடியில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் உடனே தலைமுடி உதிர்தல் என்பது ஆரம்பித்து விடும். தலைமுடி உதிர்தல் மட்டுமல்லாமல் இளநரை, பொடுகு போன்ற பிரச்சினையும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் என்றைக்குமே நாம் நம்முடைய தலைமுடியை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நம்முடைய நம்முடைய முன்னோர்கள் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். நாளடைவில் இந்த எண்ணெய் தேய்க்கும் பழக்கம் என்பது படிப்படியாக குறைந்துவிட்டது. சிலர் தினமும் எண்ணெய் தேய்க்காமல் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக எண்ணெயை நன்றாக தேய்த்து அரை மணி நேரம் வைத்து விட்டு பிறகு தலைக்கு குளிப்பார்கள். இன்னும் சிலரோ அதை கூட செய்ய மாட்டார்கள்.

- Advertisement -

நம்முடைய சருமத்தில் இயற்கையாகவே ஒரு வித எண்ணெய் சுரப்பி இருக்கிறது இந்த எண்ணெய் சுரப்பியானது சராசரியாக அதனுடைய எண்ணையை சுரந்து கொண்டு இருந்தால் சருமம் வறட்சி அடையாமல் இருக்கும். சருமம் வறட்சி அடைந்தால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக வெயிலில் சென்று வருபவர்களுக்கும், அதிக உழைப்பில் ஈடுபடுபவர்களும், உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்.

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் வராமல் இருப்பதற்கு நாம் பல வகைகளில் நம் வீட்டிலோ அல்லது கடையிலோ மூலிகை எண்ணெய்கள் என்ற பெயரில் வாங்கி தலைக்கு உபயோகப்படுத்தினாலும் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள் கடுகு எண்ணெயை பயன்படுத்தும் பொழுது விரைவிலேயே அவர்களுக்கு நல்ல பலன் கிடைப்பது அவர்களால் உணர முடியும்.

- Advertisement -

வட மாநிலங்களில் பிறந்த மூன்று மாத குழந்தைகளுக்கு இந்த கடுகு எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்க்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தங்களுடைய சமையலுக்கு அதிக அளவில் கடுகு எண்ணெய் தான் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் கடுகு எண்ணெய் அந்தளவுக்கு நாம் உபயோகப்படுத்துவது இல்லை.

இந்த கடுகு எண்ணெயை நேரடியாக அப்படியே தலையில் தடவக்கூடாது. தலைமுடி பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கடுகு எண்ணெயை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடி பிரச்சினை என்பது முற்றிலுமாக நீங்கும். காரணம் இந்த கடுகு எண்ணெயில் பீட்டா கரோட்டினும் ஒமேகா-3 அதிக அளவில் இருக்கிறது. இதனால் நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்கள் வலுப்பெறும் அதோடு பொடுகு பிரச்சினையும் நரைமுடி பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கப்படும்.

- Advertisement -

சரி இந்த கடுகு எண்ணையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நான்கு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு கடுகு எண்ணெயை ஊற்றி மேலும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்து இந்த கலவையை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவி ஐந்து நிமிடம் ஆவது மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு துண்டை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் முக்கி பிழிந்து நம்முடைய தலையில் குறைந்தது அரை மணி நேரம் ஆவது கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மைல்டான ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் நாம் இந்த கடுகு எண்ணையை இப்படி பயன்படுத்துவதால் நம்முடைய தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கி தலை முடி வலுவாகவும் பொடுகில்லாமலும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: அழகை அள்ளித் தரும் வெந்தயம்

மிகவும் எளிமையான இந்த வழிமுறையை நாம் பின்பற்றி நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வோம்.

- Advertisement -