கருகருவென்று அடர்த்தியான கூந்தல் வளர்வதற்கு கடுகு எண்ணெயை இப்படித்தான் பயன்படுத்தணும் தெரியுமா? நீளமா மட்டும் இருக்கும் முடியை அடர்த்தியாகவும் ஆக்க இதை செய்யுங்க!

thick-hair-kadugu-oil
- Advertisement -

சிலருக்கு வெட்ட வெட்ட முடி வளர்ந்து கொண்டே செல்லும். ஆனால் சிலருக்கு முடி வெட்டினால் மீண்டும் நீளமாக வளராது, குட்டையாகிவிடும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முடியின் அமைப்பு உள்ளது. நீளமாக இருக்கும் முடி, சிலருக்கு அடர்த்தியாக வளர்வது கிடையாது. இப்படி அடர்த்தியாக வளர செய்வதற்கு எளிமையாக என்ன செய்வது? கடுகு எண்ணெய் முடியை காடு போல வளர வைக்குமாம். அது எப்படி? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முடி காடு மாதிரி அடர்த்தியாக வளர்வதற்கு கடுகு எண்ணெயை தேவையான அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கக்கூடிய விட்டமின் மற்றும் புரோட்டின் அனைத்தும் தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதை பயன்படுத்தும் விதத்தில் நாம் பயன்படுத்தி வந்தால் மண்டை தெரியும் அளவிற்கு முடி இழந்து இருந்தாலும் மீண்டும் புதிதாக முடி வளர்ந்து கருகருன்னு அடர்த்தியாக இருக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய அளவிலான பவுலில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கெட்டியான தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தயிர் புளிப்பு அல்லாமல் இருக்க வேண்டும். தயிருடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெங்காய சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் இல்லை என்றாலும் பரவாயில்லை, சின்ன வெங்காயம் இருந்தால் அதை மிக்ஸியில் அரைத்து அல்லது இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெய் மற்றும் கால் டீஸ்பூன் ஊற வைத்த வெந்தயம் ஆகியவை சேர்த்து நன்கு நைசாக மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் ரொம்பவே முக்கியமானது. அதிலும் கடுகு எண்ணெய் நல்ல ஒரு எபக்ட்டிவ்வான ரிசல்ட்டை கொடுக்கக் கூடியது. கடுகு எண்ணெயில் இருக்கக்கூடிய நுண் சத்துக்கள் பல்வேறு காரணங்களால் இழந்து கொண்டிருக்கும் வலுவிழந்த தலைமுடியை ரிப்பேர் செய்து, வேரில் இருந்தே வலுவாக்குகிறது. இதனால் முடி உதிர்தல் கட்டுப்படுகிறது. இவை அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக் கொண்டு தலையின் ஸ்கால்ப் பகுதியில் இருந்து எல்லா இடங்களுக்கும் தடவி உலர விட்டுவிட வேண்டும்.

- Advertisement -

20 நிமிடத்தில் இருந்து 1/2 மணி நேரம் வரை நன்கு காய்ந்து உலர விட்டு விட்டு பின்பு தலைக்கு சாதாரணமாக எப்பொழுதும் போல அலசிக் கொள்ளுங்கள். இந்த ஒரு பேக்கை வாரம் இரண்டு முறை தாராளமாக பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் இரண்டு முறை பயன்படுத்தி படிப்படியாக வாரம் ஒரு முறை என்று குறைத்துக் கொண்டே வாருங்கள். இப்படி நீங்கள் இந்த ஒரு பேக்கை தலைக்கு தடவி வந்தால் முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், கருகருவென்று கருங்குந்தலுடனும் அலைபாயத் துவங்கும்.

இதையும் படிக்கலாமே:
தலை முடி உதிராமல் அதிவேகமாக வளர இந்த ஒரு எண்ணையை நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இப்படி ஒரு முடி வளர்ச்சியான்னு நீங்க ஆச்சரியப்படுற அளவுக்கு அபாரமான முடி வளர்ச்சியை பார்க்கலாம்.

வெங்காய சாற்றில் இருக்கக்கூடிய சல்ஃபர் தலைமுடியின் ஸ்கேல்பிற்கு நல்ல ஒரு ரத்த ஓட்டத்தை கொடுக்கக் கூடியது. தயிர் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி தன்மையை போக்கக்கூடியது. வெந்தயம் குளிர்ச்சியை தரும். கற்றாழை ஜெல் முடியை மென்மையாக மாற்றும். கடுகு எண்ணெய் நன்கு தூண்டிவிட்டு முடியை வேகமாக வளர செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த இந்த ஒரு பேக் நல்ல ஒரு ரிசல்ட்டை கொடுக்கக் கூடியது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -