ஒரு உருளைக்கிழங்கு ஒரு கப் முட்டைகோஸ் இருந்தா போதும் ரொம்ப சிம்பிளா, கிறிஸ்பியா, மொறு மொறுன்னு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடலாம். வாங்க இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

cabbage Potato Bonda
- Advertisement -

ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ற உடனே குழந்தைகளுக்கு கடைகளில் பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கும் பண்டங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இது அவ்வளவாக உடம்பிற்கு நல்லது கிடையாது என தெரிந்தும் கூட அந்த நேரத்திற்கு சுலபமாக வேலை முடித்து விடுவதற்காக இப்படியான ஸ்நாக்ஸ் வகைகளை பெரியவர்களும் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்காத அதே நேரத்தில் உடலுக்கும் நல்லதாக ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்பதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த முட்டைகோஸ் போண்டா செய்வதற்கு முதலில் துருவிய முட்டைகோஸ் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி அதையும் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு பச்சை, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், அதே போல் ஒரு பெரிய வெங்காயத்தையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு பவுலில் இந்த காய்கறிகளை எல்லாம் மொத்தமாக சேர்த்த பிறகு, கால் கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை இவையெல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லேசாக தண்ணீர் தெளித்து இந்த மாவை பக்கோடா போடும் பதத்துக்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அடுத்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடிக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு உருட்டி வைத்த போண்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சிவந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவு தான் சுவையான முட்டைகோஸ் உருளைக்கிழங்கு போண்டா நிமிடத்தில் தயாராகி விட்டது. இதில் நாம் காய்கறிகளை தயார் நேரம் மட்டுமே அதிகம். மற்றபடி அனைத்தையும் கலந்த உடனே பொரித்து எடுத்து கொடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிசத்தில் லட்டு செஞ்சா இனி இப்படித் தான் செய்யணும் சொல்ற மாதிரி ஒரு சூப்பரான அதே சமயம் ஆரோக்கியமான லட்டு ரெசிபி. ஒன்னு சாப்பிட போதும் திரும்ப திரும்ப சப்பிட்டே இருப்பிங்க.

இனி குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்து கொடுப்பது என்ற கவலையே இல்லாமல் சட்டுன்னு இந்த போண்டா செய்து கொடுத்து விடுங்கள் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

- Advertisement -