சுவையான மட்டன் கிரேவி செய்யும் முறை இதோ

mutton

மட்டன் கிரேவி பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். இந்த பதிவில் சுவையான மட்டன் கிரேவி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

mutton_2

மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
தக்காளி – 2
கொத்தமல்லி – சிறிதளவு

மட்டன் கிரேவி செய்முறை:

முதலில் மட்டன் மற்றும் மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு குக்கரில் 4 விசில் வரை வைக்கவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

mutton_3

- Advertisement -

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் மல்லிப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

mutton_4

பிறகு அதில் நறுக்கிய தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து, பிறகு குக்கரில் உள்ள மட்டனை அந்த கடாயில் கொட்டி நன்றாக வேகவிடவும். மட்டன் நன்றாக கிரேவி ஆனதும் அதில் சிறிதளவு கொத்தமல்லி தூவி 3இறக்கினால் சுவையான மட்டன் கிரேவி தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
மீன் 65 செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Mutton gravy recipe in Tamil. It is also called as Mutton gravy seimurai or Mutton gravy seivathu eppadi in Tamil or Mutton gravy preparation in Tamil.