உங்கள் வீட்டிலேயே சுவையான மீன் 65 செய்யும் எளிய முறை இதோ

fish-65
- Advertisement -

மீன் 65 பெரும்பாலும் மீன் கடைகளில் அதிகமாக கிடைக்கும். மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் 65 சாப்பிட்டு இருப்பார்கள். மீன் 65 சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். அதனை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

fish 65 1

மீன் 65 செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

மீன் – 1 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் மாவு – 1/2 கப்
மைதா மாவு – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

மீன் 65 செய்முறை:

முதலில் ஒரு பவுலில் மீனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கார்ன்மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

- Advertisement -

fish 65 2

பிறகு, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, முட்டை உடைத்து அதில்சேர்த்து கலந்து கொள்ளவும். கூடவே அதனுடன் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வெண்டும்.

எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் ஊறவைத்த மீனை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் 65 தயார்.

- Advertisement -

fish 65 3

சமைக்க ஆகும் நேரம் – 45 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5

இதையும் படிக்கலாமே:
கே எப் சி சிக்கன் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Fish 65 recipe in Tamil. It is also called Fish 65 ingredients in Tamil or Fish 65 preparation in Tamil or Fish 65 seimurai in Tamil or Fish 65 seivadhu eppadi in Tamil.

- Advertisement -