மட்டன் சுவையில் சைவ வாழைக்காய் சுக்காவை மசாலா அரைத்து இவ்வாறு செய்து பாருங்கள்

valaikai
- Advertisement -

செவ்வாய், வெள்ளி, சனி, மற்றும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை போன்ற விரத நாட்களிலெல்லாம் பலரது வீடுகளிலும் அசைவம் சமைப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் ஒரு சில சமயம் வீட்டிலுள்ளவர்கள் இன்றைய தினங்களில் ஏதேனும் அசைவம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு அந்த நேரத்தில் அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் சுக்கா. வாருங்கள் இதனை எப்படி அசைவ சுவையில் சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

saturday

தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் – 2, சின்ன வெங்காயம் – 7, மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், பூண்டு – 5 பல், இஞ்சி சிறிய துண்டு – இரண்டு, சோம்பு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், எலுமிச்சை பழம் – 1/2, கிராம்பு – 2, கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வாழைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஒரு தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் வாழ்க்ககாய் கருத்து விடும். அதன் பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பாதியளவு எலுமிச்சை பழத்தை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.

vazhakkai

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை எண்ணெயில் சேர்த்து நன்றாகப் பொரித்து எடுக்க வேண்டும். பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

 

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை எண்ணெயில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பிறகு மசாலா சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு, பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக பிறட்ட வேண்டும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் சுக்கு தயாராகிவிட்டது. ஒருமுறை இவ்வாறு செய்து சுவைத்துப் பாருங்கள். அசைவம் சாப்பிடும் அதே சுவையில் மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -