வெளியே செல்லும்போது, இந்த பொருளை, கையில் எடுத்து கொண்டு சென்றாலே போதும். தோல்விக்கு இடம் இல்லை. வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் தான்.

pillaiyar

சில சமயங்களில், சில நல்ல காரியங்களுக்கு வெளியே செல்லும்போது, தோல்வி என்ற ஒரு நிலை வந்தால் பரவாயில்லை. சிலபேருக்கெல்லாம் எந்த காரியத்திற்காக, எப்போது வெளியே சென்றாலும், தடைகளும் தடங்கல்களும் தான் முன்னே வந்து நிற்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையை, வாழவே மிகவும் சிரமப்படுவார்கள். நாம் வெளியே சென்றால் நாம் எடுக்கும் முயற்சிக்கு, நாம் தொடங்க கூடிய நல்ல காரியத்திற்கு தடை என்பதே வரக்கூடாது. நாம் நினைத்தது நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால், நம்முடன் எந்த பொருட்களையெல்லாம் எடுத்து செய்யலாம் என்பதை பற்றிய ஒரு பதிவு தான் இது.

virali-manjal

முதல் பொருள், மங்களத்தை மட்டுமே கொடுக்கக்கூடிய விரலி மஞ்சள். இரண்டாவது பொருள், கெடுதலை நம்மிடம் நெருங்க விடாமல் தடுக்கக்கூடிய வசம்பு. மூன்றாவது பொருள், தடைகளை தகர்க்கும் அருகம்புல். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பேப்பரில் மடித்து எடுத்து உங்கள் பர்சில் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

அப்படி இல்லை என்றால், இந்த மூன்றில் எது உங்களிடம் இருக்கிறதோ அதை மட்டுமாவது வெளியே செல்லும்போது, உங்களுடன் எடுத்துச் செல்லலாம். குறிப்பாக நல்ல காரியங்களை தொடங்குவதற்கு வெளியே செல்வதாக இருந்தாலும், இன்டர்வியூக்கு வெளியே செல்வதாக இருந்தாலும், சுபகாரியத்திற்கு வெளியே செல்வதாக இருந்தாலும், இந்த மூன்றில் ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை மூன்றையும் ஒன்றாக சேர்த்து எடுத்து செல்லும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உங்கள் வாழ்வில் வித்தியாசத்தை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.

Arugampul juice benfits Tamil

அடுத்தபடியாக, மிக மிக முக்கியமான காரியம் என்றால், நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையும், குறிக்கோளும் உங்களுக்கு நிறைவேற போகின்றது. அதற்கான வேலையை பார்க்க நீங்கள் வெளியே செல்கிறீர்கள், அல்லது உங்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை, பெண் பார்க்க செல்லப் போகிறீர்கள். பல வருடங்களாக நல்ல வேலை கிடைக்காமல், இன்று ஒரு நல்ல இன்டர்வியூக்கு செல்லப் போகிறீர்கள், வெற்றி உங்கள் பக்கமாக வேண்டுமென்றால், இந்த ஒரு குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

வெற்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் புதனின் ஆசீர்வாதத்தை நாம் பெறவேண்டும். புதன் பகவானுக்கு உகந்த பச்சை பயிரை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்படியாக மிக முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது, வெளியே செல்லக் கூடியவர்கள் முதலில் கிழக்கை பார்த்தவாறு நின்று கொள்ள வேண்டும்.

vasambu 3

உங்களுடைய வீட்டில் வேறு யாராவது உங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வதற்கு இருந்தால், உங்கள் மனைவியோ,  அம்மாவோ, அக்கா தங்கையோ இப்படி யார் இருந்தாலும் சரி, அல்லது உங்க அப்பா உங்கள் அண்ணன் இப்படி யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உறவுகள் எல்லாம் உடன் இல்லை, நீங்கள் தனியாக ரூம் எடுத்து தங்கி இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு நீங்களே கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

pachai_payaru

கொஞ்சமாக பச்சை பயிறை கையில் எடுத்து உங்களது தலையை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் 3 முறை சுற்றி உங்கள் தலையின் மேலே போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். உங்கள் உறவினர்கள் யாராவது இருந்தால், அவர்களை உங்களது தலையை சுற்றி இந்த பச்சை பயிரை உங்கள் தலை மீது ஆசீர்வாதம் செய்வது போல் போடச் சொல்லுங்கள். பரிகாரத்தை செய்து விட்டு அந்த பச்சை பயிரை எல்லாம் எடுத்து காக்கை குருவிகளுக்கு பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம். இதை செய்து விட்டு போகிற காரியம் எக்காரணத்தைக் கொண்டும் தோல்வி அடைவதற்கும் வாய்ப்பு கிடையாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எப்பேர்ப்பட்ட கடனும் சீக்கிரம் தீர இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.